சிங்கப்பூரில் Lazada நிறுவனத்தின் புதிய தலைமையகம் – குத்தகைக்கு எடுத்துள்ள அலிபாபா நிறுவனம்

lazada in singapore

இ-காமர்ஸ் தளமான Lazada அதன் புதிய தலைமையகத்தை Central Bras Basah மாவட்டத்தில் இன்று (திங்கள் கிழமை) அதிகாரப்பூர்வமாக திறந்தது. அதைத்தொடர்ந்து நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும்.
பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்புகளை டிஜிட்டல் பொருளாதாரத்தில் வழங்குவதற்காக Lazada அறக்கட்டளையை அமைப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
Lazada-வின் தலைமை நிர்வாக அதிகாரி உயர்திரு Chun Li ” Lazada நிறுவனம் அடுத்த தசாப்தத்திலும் அதற்கு அப்பாலும் அதன் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை தக்க வைக்க வணிக மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உள்ளூர் திறமைகளை வளர்க்கும் மற்றும் மேம்படுத்தும் வேகத்தை நிறுவனம் அதிகரிக்கும் ” என்று கூறினார்.
Lazada-வின் புதிய தலைமையகம் 109000 சதுர அடியில் அமைக்கப்படும். அதேவேளையில் தாய் நிறுவனமான அலிபாபாவும் குத்தகைக்கு 31000 சதுர அடியை வாங்கியுள்ளது.இது 51 Bras Basah சாலையில் உள்ள கட்டிடத்தில் 58 சதவீத பங்குகளை வழங்குகிறது.இதற்கு Lazada One என்று மறு பெயரிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் Lazada நிறுவனத்தின் நான்காவது அலுவலகம் இதுவாகும். Lazada அலுவலகம் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தூய்மையான இடங்களைக் கொண்டுள்ளது. அடுத்த தலைமுறையினரின் திறமைகளை கருத்தில் கொண்டு அலுவலகம் கட்டப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.