Linked In சிங்கப்பூரில் வெளியிட்டுள்ள Top 15 நிறுவனங்கள் – DBS வங்கி உட்பட நிதி சேவை நிறுவனங்கள் பட்டியலில் ஆதிக்கம்

linked in reveals in singapore that top 15 companies in the list dbs bank ocbc bank

பிரபல செயலியான Linkedin ஆனது ஒரு வணிகத் தொடர்பான இணையதள அமைப்பாகும் .வணிக நிறுவனங்கள், தொழிலதிபர்கள், சிறு தொழில் அமைப்புகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் வணிகம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் செயலி Linkedin ஆகும்.

சிங்கப்பூரில் தொழில் வளர்ச்சிக்காக முதல் 15 நிறுவனங்களின் பட்டியலை Linkedin அமைப்பு தர வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. வங்கி போன்ற நிதி சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டு பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

Linkedin-ன் சிறந்த நிறுவனங்களுக்கான இரண்டாவது பதிப்பு இதுவாகும். தங்கள் தொழிலை விரைவாக முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல விரும்பும் ஊழியர்களுக்காக யூனிலீவர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Standard Chartered Bank இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து Prudential lc மூன்றாவது இடத்தையும் OCBC வங்கி நான்காவது இடத்தையும் மற்றும் DBS வங்கி 5-வது இடத்தையும் பிடித்து நிதி சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டுக்கான பட்டியலில் முதன்மை வகிக்கின்றன.

Alphabet Inc,Abbot,Grab,AIA மற்றும் JP Morgan Chase & Co போன்ற நிறுவனங்கள் முறையே 6,7,10,13 மற்றும் 15வது இடத்தை பிடித்துள்ளன. Accenture 8-வது இடத்தையும், Sea 9-வது இடத்தையும், IBM 11-வது இடத்தையும் Linked In வெளியிடப்பட்ட பட்டியலில் பெற்றுள்ள நிறுவனங்களாகும். EY மற்றும் Roche ஆகிய நிறுவனங்கள் முறையே 13 மற்றும் 14 வது இடத்தைப் பெற்றுள்ளன

பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல் 15 நிறுவனங்களில் Unilever மற்றும் DBS வங்கி போன்ற நெகிழ்வான வேலைகளை வழங்குவதாக Linked In கூறியது. பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்ற வங்கிகளும் அவற்றின் ஊழியர்களுக்கு திறன்களை மேம்படுத்தும் வாய்ப்புகளை வழங்குவதாக கூறப்படுகிறது.