உங்கள் தொழிலுக்கான இணையதளம், 200 பிசினஸ் ஈமெயில்கள் அனைத்தையும் வெறும் S$299 பெறுங்கள்..!

ஒரு தொழிலுக்கு அவசியம் தேவைப்படுபவை என்னும் பட்டியலில் இணையதளம் சேர்ந்து பல காலம் ஆகிவிட்டது. உங்களுடைய தொழில் குறித்த அனைத்து தகவல்களையும் இணையதளம் வாயிலாக மட்டுமே மக்களிடம் எளிதில் கொண்டுசேர்க்க முடியும். இதன்மூலம் உங்களுக்கான வாடிக்கையாளர்களை எளிதில் அடையாளம் காண்பதுடன், உங்களுடைய தொழிலை விரைவாக அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லவும் முடியும்.

ஏன் இணையதளம் வேண்டும்?

எந்தத் தொழிலிலும் வாடிக்கையாளர்களே அதன் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருக்கும் போது உங்களுடைய தொழிலும் வளர்ச்சியடையும். உங்களுக்கான புதிய வாடிக்கையாளர்களை நீங்கள் சந்திக்க, சந்திக்க உங்களுடைய லாபமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். அப்படி உங்களுக்கான வாடிக்கையாளர்களை நீங்கள் எளிதில் கண்டறிய உங்களிடத்தில் இணையதளம் இருத்தல் அவசியம்.

உலக வர்த்தக வளர்ச்சியில் கொரோனா சம்மட்டி அடி அடித்திருக்கிறது. உற்பத்தி, வியாபாரம், போக்குவரத்து என ஆதி முதல் அந்தம் வரையில் கொரோனாவின் தாக்கம் கணிசமான அளவில் இருக்கிறது. மத்திய மற்றும் சிறு நிறுவனங்கள் எதிர்காலத்தில் நிலைத்திருக்க நிச்சயம் இணையதள சந்தையையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என பல பொருளாதார அறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.

உங்களுக்கும் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு தொடர்பு இருத்தல் அவசியம். கொரோனா – ஊரடங்கு என கடைகள் மூடப்பட்ட போதும் இணையதளம் மூலமாக வியாபாரம் செய்யத் தெரிந்தவர்கள் மட்டுமே இன்றும் சந்தையில் நிலைத்து நிற்கிறார்கள்.

கால மாற்றத்திற்கு நாமும் உட்படவில்லை எனில் அதே காலம் நம்மை ஓரங்கட்டிவிடும். ஆகவே இப்போதே உங்களுக்கான இணையதளத்தை “ரெப்டஸ்” நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கிடுங்கள்.

ரெப்டஸ்

சிறு, மத்திய மற்றும் பெரு நிறுவனம் என எந்த வகையான நிறுவனத்திற்கும் ஏற்ற இணையதளங்களை உருவாக்கும் பணியில் 5 வருடங்களாக ரெப்டஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. எளிமையான பயன்பாடு, கண்கவர் வெப் டிசைன், மிகக்குறைந்த ஹோஸ்டிங் கட்டணம் என வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் ரெப்டசைத் தேர்ந்தெடுக்க காரணங்கள் பல இருக்கின்றன.

பேக்கேஜ்

ரெப்டஸ் நிறுவனம் கீழ்கண்ட சேவைகளை வழங்குகிறது.

இணைய தளத்தின் ஆறு பக்கங்களுக்கான வெப் டிசைன்

உங்களுடைய இணையதளத்தின் முதல் 6 பக்கங்களை ரெப்டஸ் நிறுவனமே வடிவமைத்துத் தரும். அதன்பிறகு உங்களுக்கு கூடுதல் பக்கங்கள் தேவைப்பட்டால் அதற்கான உதவியும் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும்.

இலவச டொமைன் நேம் (Free Domain Name)

அதாவது உங்களுடைய தொழிலின் அடிப்படையில் ஒரு இணையதளத்தின் பெயரை உருவாக்குவது. (உதாரணமாக yourbusiness.com) ரெப்டஸ் நிறுவனமே இதனை உங்களுக்காக இலவசமாக உருவாக்கித்தரும்.

கிளவுட் வகையிலான ஹோஸ்டிங் (Cloud Based Hosting)

நீங்கள் உங்களுடைய இணையதளத்தில் உங்களுக்கான தரவுத் தளத்தினை உருவாக்க வேண்டும். அப்படி என்றால்? இப்படி சொன்னால் புரியும்.

நீங்கள் உங்களுடைய தொழில் பற்றிய விளம்பரத்தை, பெரிய கட்டவுட்டாக குறிப்பிட்ட இடத்தில் வைக்கிறீர்கள். கட்டவுட் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வாடகை செலுத்த வேண்டும் இல்லையா? இணையத்தைப் பொறுத்தவரையில் ஹோஸ்டிங் என்பது அந்த வாடகைதான்.

பிசினஸ் இமெயில் (Business Emails)

உங்களுடைய வாடிக்கையாளர்களின் தேவையை சரியாக தரம் பிரிக்கவேண்டும். அதாவது உங்களுடன், உங்களது வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்ளும் வழியை தெளிவாக வகுத்துக்கொள்வது. உதாரணம் சொன்னால் இதை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

உங்களது விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வரும் பொருட்கள் பற்றிய கேள்விகளுக்கு என தனி மின்னஞ்சல் முகவரி (உதாரணம்: [email protected]), வேலைவாய்ப்பு குறித்த தகவல்களுக்கு தனி மின்னஞ்சல் முகவரி (உதாரணம்:[email protected]) என உருவாக்கிக்கொள்வது. இது உங்கள் மீதான நம்பிக்கைத் தன்மையை அதிகரிக்கும்.

ரெப்டஸ் உங்களுக்கு இப்படியான 100 மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கித்தரும். ஒவ்வொரு மின்னஞ்சல் முகவரியும் 10 ஜிபி தரவுகளை சேமிக்கும் திறன் கொண்டவை.

மறைமுக கட்டணங்கள் ஏதுமில்லை

மிகக்குறைந்த விலையில் இணையதளம் என கூகுளில் தேடினால் பல்வேறு நிறுவனங்களை நீங்கள் பார்க்க முடியும். அதுவும் நம்பவே முடியாத விலைகளில். ஆண்டுக்கு 100 சிங்கப்பூர் வெள்ளி கட்டினால் போதும் என விளம்பரத்தை நம்பி இன்று கஷ்டப்படுவோர் ஏராளம். ஏன் என்கிறீர்களா?

ஆண்டுக்கு 100 சிங்கப்பூர் வெள்ளி பணத்தினைப் பெற்றுக்கொண்டு மேற்கூறிய பிசினஸ் இமெயில், டொமைன் நேம் ஆகியவற்றிற்கு தனித்தனியாக கட்டணம் வசூலிப்பார்கள். விஷயத்தின் வீரியம் உணர்ந்து நீங்கள் சுதாரிப்பதற்குள் கணிசமான தொகை உங்களிடம் இருந்து கைமாறியிருக்கும்.

ஆனால், ரெப்டஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு 299 சிங்கப்பூர் வெள்ளி மட்டும் செலுத்தி மேற்கூறிய அனைத்து சேவைகளையும் பெறலாம். எவ்வித மறைமுக, சேவைக் கட்டணங்களும் உங்களிடமிருந்து வசூலிக்கப்படாது. இதனாலேயே சிங்கப்பூரில் பல வளரும் நிறுவனங்கள் ரெப்டசை நாடுகின்றன.

ரெப்டஸ் நிறுவனத்தின் திறமைவாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் உங்களுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான முறையில் பதிலளிப்பார்கள். இன்னும் ஏன் யோசனை? உங்களது தொழிலை ஒளிமயமான, வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச்செல்ல இன்றே ரெப்டஸ் நிறுவனத்தின் மூலம் உங்களுக்கான இணையதளத்தை ஆண்டுக்கு 299 சிங்கப்பூர் வெள்ளி செலவில் உருவாக்கிடுங்கள்.

தொடர்புக்கு: WhatsApp+919952716174