சிலர் நினைத்தவுடன் வெளிநாடுகளுக்கு பக்கத்து ஊருக்கு சென்று வருவது போல சென்று வருகிறார்களே, அது எப்படி..? Singapore Tour

indian worker jailed stalking woman work
Singapore

Singapore Tour : வெளிநாட்டு பயணத்தை திட்டமிட்டு மேற்கொண்டால், அது அதிக செலவு வைப்பதில்லை. நீங்கள் சற்றும் எதிர்பாராத சிறிய தொகையில், ஆசிய நாட்டை சுற்றிப் பார்த்துவிட்டு, வந்துவிடலாம்.

சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, துபாய், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சொல்லலாம். அங்கு, ஏராளமான இந்திய உணவகங்கள் உள்ளன. இவை இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த நாடுகள். சுத்த சைவ சாப்பாடுகளும் இங்குண்டு.

ஆரம்பத்தில் சுற்றுலா நிறுவனங்களின் உதவியுடன், சுற்றுலா போவதே சிறப்பு. போக வர பயண ஏற்பாடு, போகும் இடத்தில் ஓட்டல் ஏற்பாடு, அங்கு என்னென்ன விஷயங்களைப் பார்க்க வேண்டும்,

வெளிநாட்டுப் பயணமெனில் பண மாற்று உதவி, ‘விசா’ உதவி போன்ற விஷயங்கள் அனைத்தையும், ஒரு தனி ஆள், பல இடங்களில் தேடித் தேடிச் செய்வது, கொஞ்சம் கடினமான வேலை. ஆனால், இதையே தொழிலாக கொண்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு இலகுவானது.

மேலும், இதற்கான விலையும் அவர்களுக்கு மலிவாக கிடைக்கும்; ஆனால், இறங்கித் தேடினால், இணையத்தின் மூலம் அனைத்தையும் நாமே செய்து விட முடியும்.

Tripadvisor, Airbnb போன்ற வலைதளங்களை இதற்கு உதவியாக இருக்கும். இப்படி, நாமே நேரடியாக செய்வதால், பல சமயம் செலவு கூடவும் வாய்ப்புள்ளது.

ஆங்கிலம் செல்லுபடியாகாத வெளிநாடுகளுக்குப் பயணம் போகும் போது, நாம் கொஞ்சம் திணற வேண்டி வரும். இங்கே சுற்றுலா நிறுவனத்தின் உதவி நிச்சயம் தேவைப்படும். தனியே போகாமல், குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும் கூட்டிச் செல்கிறீர்கள் என்றால், அத்தனை பேருக்கு ஏற்பாடுகள் செய்வது மிகவும் கடினம். பல முகச் சுளிப்புகளையும் சமாளிக்க வேண்டி வரும்.

வெளிநாடுகளுக்கான நுழைவுச்சீட்டு (VISA) நடைமுறைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.