சர்வதேச பயணிகளுக்கு தனிமை இல்லா பயணம்…எல்லைகளை திறக்கும் மலேசியா – ஏப். 1 முதல் Endemic நிலை!

REUTERS

சர்வதேச பயணிகளுக்கு மலேசியா தனது நாட்டின் எல்லையை மீண்டும் அடுத்த மாதம் ஏப்ரல் 1 முதல் திறக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் அந்நாட்டிற்குள் நுழைய முடியும்.

இந்தியர்களுக்கு தனிமை இல்லா தாராள அனுமதி கொடுத்த சிங்கப்பூர்: தமிழகத்தில் கூடுதல் விமான நிலையங்கள் சேர்ப்பு!

இந்த அதிகாரபூர்வ தகவலை மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) தெரிவித்தார்.

அடுத்த மாதம் முதல் கோவிட்-19 மக்களோடு மக்களாய் இருக்கும் endemic நிலைக்கு மாறும் என்று திரு இஸ்மாயில் சப்ரி தொலைக்காட்சி உரையில் கூறினார்.

இருப்பினும், பொதுமக்கள் பொது இடங்களில் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும், மேலும் MySejahtera செயலி தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் வருகைக்கு முன் PCR சோதனையையும், வந்த பிறகு ART சோதனைக்கும் உட்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் ட்வீட்டில் கூறியுள்ளார்.

#Exclusive: சிங்கப்பூரில் தமிழக ஊழியரை 3 மாதங்களாக காணவில்லை: “எப்டியாவது கண்டுபிடிச்சி தாங்க” கண்ணீருடன் பெற்றோர்!