எளிதாக Work Permit கிடைக்குமா? மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள்!

(Photo: TODAY)

மலேசியாவில் வேலைகள் அதிகமாக இருக்கின்றது. உள் நாட்டினர் செய்ய விரும்பாத பல வேலைகளை பங்களாதேஷ், நேபாள், இந்தியா, இலங்கை தொழிலாளர்கள் செய்ய விரும்புகிறார்கள்.

முதலாளிகள் லெவி கட்ட தயாராக இருக்கின்றனர். ஆனால் அரசியல் காரணங்களால் பெர்மிட் தொடர்பான முடிவு எடுக்க தாமதிக்கின்றனர்.

தென்கிழக்காசியாவில் மலேசியா மிகவும் வளர்ந்து கொண்டிருக்கும் நாடு அங்கு தொழில் நுட்பம் உணவகங்கள் மற்றும் கட்டமைப்பு தொடர்புடைய பணிகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு

அதற்கு முன்பு மலேசிய நாட்டின் வேலைவாய்ப்புக்காக அனுமதி பெறுவது மிகவும் அவசியம் தற்சமயம் மலேசியாவில் இயற்றப்பட்ட புதிய சட்டப்படி ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அதனால் மலேசியன் வேலை தேடுபவர்கள் எந்த மாதிரியான வேலைக்கு செல்வது என்பதை தீர்மானித்துக் கொள்ளவும்

மற்றும் மலேசியாவில் குறிப்பாக தமிழர்களுக்கு தங்குவது உணவு என்பது போன்றவற்றுக்கு பெரியளவில் எந்தவிதமான சிரமமும் இல்லை தாங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்

மலேசிய நாட்டிற்கு வேலைக்காக செல்வதற்கு முன்பு ஒரு தடவை 15 நாள் சுற்றுலா அனுமதி சீட்டின் மூலம் மூலம் திருச்சி அல்லது சென்னையிலிருந்து மலேசியாவிற்கு பயணம்செய்து அந்த நாட்டின் உள்ள வேலைவாய்ப்புகளை நேரடியாக அறிந்து கொள்ளலாம் இதன்மூலம் முகவர்களால் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும்

மற்றும் மலேசியாவில் வேலை செய்யும் போதும் வேலைதேடும் போதும் மத ரீதியாக இன ரீதியாக பேச்சுக்களைத் தவிர்த்தல் நல்லது.

இந்திய தொழிலாளர்களுக்கான தேவை அங்கு அதிகமாக நிலவுகிறது. அரசின் தடையால் வாய்ப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.