Facebook தாய் நிறுவனமான Meta Platforms Inc. சுமார் 11,000க்கும் மேலான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
நிறுவனம் தொடங்கியதில் இருந்து 18 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் பெரிய அளவிலான ஆட்குறைப்பு ஆகும்.
மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 13 சதவீத ஊழியர்களை Meta ஆட்குறைப்பு செய்ய உள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி நிலவரப்பபடி, சுமார் 87,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிவதாக Meta நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டரின் சமீபத்திய ஆட்குறைப்பை தொடர்ந்து இது மேற்கொள்ளப்படுகிறது. அங்கு 7,500 வேலைகளில் 3,700 வேலைகள் பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.