பில்லியன் வருவாய் ஈட்டும் நிறுவனங்களை பட்டியலிட்ட ஃபோர்ப்ஸ்! மாஸ் காட்டும் 9 சிங்கப்பூர் நிறுவனங்கள்!

best things to do in singapore in september 2019
best things to do in singapore in september 2019

ஃபோர்ப்ஸ் ஆசியா வெளியிட்ட பில்லியன் வருவாய் ஈட்டும் டாப் 200 நிறுவனங்கள் லிஸ்டில் சிங்கப்பூரில் இருந்து 9 நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. ஆசியா- பசிபிக் பகுதிகளில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது அதற்கு மேற்பட்டு வருமான ஈட்டும் நிறுவனங்களின் லிஸ்டில் இந்த 9 சிங்கப்பூர் நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, DBS வங்கி, OCBC வங்கி மற்றும் யுனைட்டட் ஓவர்சீஸ் வங்கி ஆகிய மூன்று வங்கிகளும் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளன. மேலும், வில்மர் இண்டர்நேஷனல், கேபிடல் லேண்ட், சிட்டி டெவலப்மென்ட்ஸ், ஓலம் இண்டர்நேஷனல், ASM பசிபிக் டெக்னாலஜி மற்றும் வென்ச்சர் கார்ப்பரேஷன் ஆகிய 9 சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளன.

DBS வங்கி 13வது இடத்தையும், OCBC வங்கி 20வது இடத்தையும், UOB வங்கி 23வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.