இந்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனின் கோரிக்கை -கிரிப்டோகரன்சிகளுக்கு எதிராக சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அடுத்த நடவடிக்கை என்ன?

crypto currency ADDP

சிங்கப்பூர் எதிர்வரும் மாதங்களில் கிரிப்டோ தளங்களில் கடுமையாகச் செயல்படும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின்(MAS) தலைமை நிர்வாகி தெரிவித்தார்.சிங்கப்பூரில் ஏற்கனவே,கிரிப்டோ வர்த்தகத்திற்கு தெளிவான உரிமம் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது.மத்திய வங்கியின் ஆண்டறிக்கையை வெளியிட்ட பிறகு எந்தவொரு நிறுவனமும் சட்டவிரோதமாக செயல்படுவது அல்லது மோசடி செய்வது கண்டறியப்பட்டால்,MAS மற்றும் அது தொடர்பான அரசு நிறுவனங்கள் அமலாக்க நடவடிக்கை எடுக்கும் என்று MAS நிர்வாக இயக்குனர் ரவி மேனன் கூறினார்.

கிரிப்டோ வர்த்தகம் நிச்சயமற்ற நிலையை உடையது என்பதால் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகள் கிரிப்டோகரன்சிகளுக்கு எதிரான நடவடிக்கையைத் திட்டமிட்டுள்ளன.கிரிப்டோகரன்சிகளுக்கான விதிமுறைகளை வகுக்க இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ள நிலையில் அத்தகைய தடையை நடப்புக்கு கொண்டுவர வேண்டுமெனில் ,இந்திய அரசாங்கம் சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

சில கிரிப்டோ பிளேயர்கள் “சிங்கப்பூரை தளமாகக் கொண்டவை” என ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக மேனன் கூறினார். “உண்மையில், இந்த ‘சிங்கப்பூர் அடிப்படையிலான’ கிரிப்டோ நிறுவனங்கள் சிங்கப்பூரில் உள்ள கிரிப்டோ தொடர்பான ஒழுங்குமுறைகளுடன் சிறிதும் தொடர்பு கொள்ளவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.