இனி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே விமான சேவை – இந்திய மாநிலம் அதிரடி உத்தரவு

Omicron கிருமி வேகமாக பரவிவருவதால் இந்தியா முழுவதும் கட்டுப்பாடுகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும் தயார் நிலையில், பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றன.

கடும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் “குட்டி” தன்னார்வலர்: அசந்து போன நெட்டிசன்கள் – குவியும் பாராட்டு

அந்த வகையில், அதிமான மாநிலங்களில் இரவு நேரத்தில் மக்கள் நடமாட கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதோடு சேர்த்து, பொது இடங்களில் பகல் நேர கூட்டங்களுக்கும் வரைமுறை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில அரசு, வாரம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி 5 முதல் மும்பை, டெல்லி ஆகிய பெருநகரங்களில் இருந்து வரும் விமானங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது அம்மாநில அரசு.

அதாவது, வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மட்டுமே விமான சேவைக்கு அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்நாய் ஒன்றைச் சுற்றி வளைத்த 9 காட்டு நாய்கள்… அடுத்து என்ன நடந்தது ? – சிங்கப்பூர் வைரல் வீடியோ