ஒமைக்ரான் அச்சம்: உலகம் முழுவதும் 5,900 விமான சேவை ரத்து – பல ஆயிரம் கோடி நட்டம்

flights suspends

உலக நாடுகளில் ஒமைக்ரான் கிருமி பரவல் தீவிரமாக இருப்பதால், பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் டிச. 24, 25, 26ஆம் தேதிகளில் மட்டும் சுமார் 5,900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை – டிசம்பர் 29 முதல் தொடக்கம்!

இதில் அதிகமாக தடைபட்ட விமான சேவை, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சேவையில் ஈடுபட இருந்த 1,259 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

உலகம் முழுவதும் சுமார் 3,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அதனால் கிடைக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரத்தின் மீது மோதிய SBS பேருந்து: 6 பேர் மருத்துவமனையில் அனுமதி – ஓட்டுநர் சஸ்பெண்ட்