COVID-19 பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட எச்சரிக்கை!

Omicron More Infectious Than Delta Variant
Photo Credit: Shin Min Daily News & Mothership

டெல்டா மற்றும் பீட்டா வைரஸுடன் ஒப்பிடும்போது, ​​கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாடு அதிக அளவில் பரவக்கூடியதாகவும், மீண்டும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் உலகளவில் ஆரம்பகால மருத்துவ ஆய்வுகள் தெரிவிப்பதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19 பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நபர்கள் ஓமிக்ரான் மாறுபாட்டால் மீண்டும் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக  தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, சிங்கப்பூரில் 552 புதிய COVID-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டதோடு,  13 இறப்புகளும் நேர்ந்தன.

கடந்த பல நாட்களாக, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளின் அறிக்கைகளை மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள நிபுணர்களை நேரடியாகத் தகவல்களைப் பெறுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள COVID-19 தடுப்பூசிகள் புதிய மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகின்றனவா என்பது பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆனால் “தற்போதுள்ள COVID-19 தடுப்பூசிகள் Omicron மாறுபாட்டில் இன்னும் செயல்படும் விதம் குறித்த தெளிவான முடிவுகள் இல்லை.

தகுதியுடையவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அமைச்சகம் வலியுறுத்தியது. அவ்வாறு செய்வது COVID-19 இன் தற்போதைய மற்றும் எதிர்கால மாறுபாடுகளிலிருந்து பாதுகாக்கும். மேலும் Omicron தொடர்பான இறப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

தொண்டை புண், சோர்வு மற்றும் இருமல் ஆகியவை பொதுவான அறிகுறிகளாக காணப்படுகின்றன என்று அமைச்சகம் கூறியது.

டிசம்பர் 1 ஆம் தேதி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் எந்த சமூக தொடர்பும் இல்லை என்று அமைச்சகம் கடந்த வாரம் கூறியது.

அவர்கள் இருவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருமல் மற்றும் தொண்டை அரிப்பு போன்ற லேசான அறிகுறிகள் இருந்தன.

தேசிய பொது சுகாதார ஆய்வகம் மாறுபாட்டை உறுதிப்படுத்த முழு மரபணு வரிசைமுறையை நடத்தி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் 2,69,211 COVID-19 பாதிப்புகள் மற்றும் 759-கொரோனா வைரஸ் தொடர்புடைய இறப்புகள் பதிவாகியுள்ளன.