சிங்கப்பூரில் பணியாற்றும் ஒவ்வொருவரும் பெருமைப்படணும் – அதற்கான 10 காரணங்கள் இதோ!

சிங்கப்பூரில் உலகின் மிக அதிகமான மில்லியனர்கள் உள்ளனர், ஒவ்வொரு ஆறு குடும்பங்களில் ஒரு குடும்பம் குறைந்தது ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கக்கூடிய செல்வத்தைக் கொண்டுள்ளது.

  1. சிங்கப்பூர் வலுவான சர்வதேச வர்த்தக இணைப்புகளைக் கொண்டுள்ளது. ஏனெனில் சிங்கப்பூர் துறைமுகம் உலகின் மிகவும் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகும்.
  2. சிங்கப்பூர் உலகளாவிய வர்த்தகம், நிதி மற்றும் போக்குவரத்துக்கான மையமாக விளங்குகிறது.
  3. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக, உலக வங்கியால் வணிகம் செய்வதற்கான எளிதான இடமாக வகைபடுத்தப்பட்டுள்ளது.
  4. உலகப் பொருளாதார மன்றம் (WEF) சிங்கப்பூரை தொழில்நுட்பத்தால் தயாரான நாடாகக் கருதுகிறது. உலகின் 2 வது போட்டி நாடாகவும் பார்க்கிறது.
  5. சிங்கப்பூர் உலகின் 3-வது பெரிய அந்நிய செலாவணி மையமாகும். உலகின் 3வது பெரிய நிதி மையமாகவும் விளங்குகிறது.
  6. சிங்கப்பூர் உலகின் 3-வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் வர்த்தக மையத்தைக் கொண்டுள்ளது.இது 1990 களில் இருந்து முதல் இரண்டு பரபரப்பான கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாகும்.
  7. கடந்த சில வருடங்களில் S&P, Moody’s மற்றும் Fitch உட்பட அனைத்து முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனங்களிடமிருந்தும் AAA இறையாண்மை மதிப்பீட்டைக் கொண்ட ஒரே ஆசிய நாடு சிங்கப்பூராகும்.
  8. சிங்கப்பூர் ஆசியாவின் செல்வாக்கு மிக்க நகரமாகவும், போர்ப்ஸ் பத்திரிக்கையின்படி உலகில் நான்காவது இடத்திலும் உள்ளது.
  9. சிங்கப்பூரில் குறைந்தபட்ச ஊதியம் இல்லை, அதனால் போட்டித்தன்மை குறைவாக நிலவுகிறது. வளர்ந்த நாடுகளில் அதிக வருமான ஏற்றத்தாழ்வுகள் நிலவ இதுவும் ஒரு காரணமாகும்.
  10. சிங்கப்பூரில் உள்ள சொத்துகள், உலகின் மிக விலையுயர்ந்த ஒன்றாக இருப்பதால், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.