சிங்கப்பூர் வேலை செய்ய முக்கியமான PCM Permit-க்கும், Work permit-க்கும் இடையேயான வித்தியாசம்!

PCM PERMIT

கப்பல் வேலை பார்ப்பவர்கள், படிப்பு அறிவு, எந்த முன் அனுபவமும் இல்லாதவர்கள், ஜெனரல் வேலை செய்வார்கள் இந்த PCM work permit கீழ் வருவார்கள்.

இதில் வருபவர்களுக்கு சம்பளம் மிக குறைவு. ஓரளவுக்கே பணம் வீட்டுக்கு அனுப்ப முடியும். வேலை மிக அதிகம். பெரும்பாலும் ஏஜென்ட் மூலமாக தான் வர முடியும்.  இல்லையென்றால் கம்பெனியில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் முயற்சி செய்யலாம். ஏஜென்ட்கள் 2 இலட்சம் ரூபாய் வரை இதற்கு கமிஷன் பெறுகின்றனர்.

WORK PERMIT

இந்த பர்மிட் கீழ் சிங்கப்பூர் வர வேலை தெரிய வேண்டும். skill certificate கண்டிப்பாக வேண்டும். சென்னையில்  நிறைய skill centre இருக்கும். அங்கே பணம் கட்டி படிக்க வேண்டும். உங்களுக்கு எலெட்ரிக்கல் வேலை தெரியும் என்றால், அங்கே போய் படித்துவிட்டு certificate வாங்கி அப்புறம் தான் விண்ணப்பிக்க முடியும். அப்படி இல்லை என்றால், டிரைவர் வேலைக்கு வரலாம். ஆனால் சிங்கப்பூர் லைசென்ஸ் வேண்டும். உங்களுக்கு வேலை தெரியுமென ஏதாச்சும் கட்டணும். அப்போ தான் விண்ணப்பிக்க முடியும்.  சம்பளம் உங்க வேலைய பொறுத்து கிடைக்கும். ஓரளவுக்கு சொல்லிக்க கூடிய அளவுக்கு வீட்டுக்கு பணம் அனுப்பலாம். மேற்படி வருமானம் ஈட்டுவது உங்க திறமை.

ஏஜென்ட் செலவு 2.5 இலட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும். இல்லை என்றாலும், கொஞ்சம் படிச்சி இருந்தா ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஈமெயில்அனுப்ப தெரிந்தால் போதும். ஆனால் போட்டிகள் அதிகம்.  ரொம்ப நாள் காத்திருக்க வேண்டும்.