‘சும்மாவா சொன்னாங்க கடன் அன்பை முறிக்கும்முன்னு’ – இனி காவல்துறையிடம் உரிமம் பெற வேண்டும்

File Photo : Singapore Police

சிங்கப்பூரில் கடன் வசூலிக்கும் நிறுவனத்தை நடத்துவதற்கு காவல்துறை உரிமம் தேவைப்படலாம்.வசூல் செய்யும் நிறுவன அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு பரிசீலிக்கபட்டுள்ள புதிய சட்டங்களின் கீழ் வரும் பல விதிகளில் ஒன்று உரிமத்தை கட்டாயமாக்கும்.

கடன் பெற்றவரிடம்தான் கடன் தொகை வசூலிக்கபடுகிறது என்பதை கடன் வசூலிப்போர் முதலில் உறுதிபடுத்த வேண்டும். கடன் வசூலிக்கும் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் புதன்கிழமை அன்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைகள் மூலம் தெரிய வருகின்றன.கடன் வசூலிக்கும் நிறுவனங்களுக்கு எதிரான புகார்கள் அதிகரித்து வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கடன் பெற்றவர்களிடம் கடன் வசூலிப்பவர்கள் மிரட்டல் விடுவது,தகாத முறையில் நடந்து கொள்வது போன்றவற்றிற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.மேலும் பேசுவது, அறிகுறி காட்டுவது,கடுமையான நடத்தைகள் எல்லாம் இவற்றில் அடங்கும்.

கொடுத்த பணத்தை வசூல் செய்வது என்பது சட்டபூர்வமான செயல் என்பதை அமைச்சகம் அங்கீகரிக்கிறது.இருப்பினும் நிறுவனங்களுக்கு எதிரான புகார்கள் அதிகரிப்பதால் இந்தத் தொழில் துறையில் ஒழுங்குமுறையை நிலை நாட்டுவது அவசியமாகிறது என்று அமைச்சகம் கூறுகிறது