எப்படி ஷாங்காய் முந்தியது? 2005 வரை சிங்கை தான் உலகின் நம்பர் ஒன் – சிங்கப்பூர் பொருளாதாரத்தின் உயிர்நாடி! | Port of Singapore

Port of Singapore
Port of Singapore

Port of Singapore : சிங்கப்பூர் துறைமுகம் என்பது கடல்சார் வர்த்தகங்களை கையாளுவதற்கான ஒருங்கிணைந்த கூட்டு வசதிகள் மற்றும் முனையங்களின் செயல்பாடுகளை குறிக்கிறது.

இது கையாளும் எடையின் அடிப்படையில் உலகின் இரண்டாவது பரபரப்பான துறைமுகமாகவும், சரக்கு கப்பல் பெட்டகம் போக்குவரத்தில் உலகின் ஐந்தாவது இடத்திலும், உலகின் வருடாந்திர கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பாதியளவும் இந்த துறைமுகத்தின் வழியே நடைபெறுகிறது.

உலகின் பரபரப்பான கப்பல் துறைமுகம். இது சரக்கு கப்பலின் கையாளப்படும் மொத்த எடை அளவில் 2005 வரை பரபரப்பான துறைமுகமாக இருந்துள்ளது, பின்னர் ஷாங்காய் துறைமுகம் இதனை முந்தியுள்ளது.

துறைமுகத்தில் நங்கூரம் இட்டுள்ள ஆயிரக்கணக்கான கப்பல்கள் சிங்கப்பூர் துறைமுகத்தினை ஆறு கண்டங்களில் பரவியுள்ள 123 நாடுகளிலுள்ள 600 பிற துறைமுகங்களுடன் இணைக்கிறது.

13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிங்கபுரா என அழைக்கப்படும் ஒரு தேசம் சிங்கப்பூர் ஆற்றின் வட கரையோரத்தில் நிறுவப்பட்டது.

மலாக்கா நீரிணைப்பில் தெற்குப் பகுதியில் கட்டப்பட்ட இந்த துறைமுகமானது இந்த பகுதியில் கப்பல்களுக்கும், வணிகர்களுக்கும் உதவியது.

PSA சிங்கப்பூர் சரக்கு பெட்டக வசதிகள்:

  • சரக்குபெட்டக கப்பல் நிறுத்துமிடம்: 52
  • கப்பல் துறை நீளம்: 15,500 மீ
  • பரப்பளவு: 600 ஹெக்டர்
  • அதிக ஆழம்: 16 மீ
  • கப்பல் துறை எடைதூக்கிகள்: 190

ஜூரோங் துறைமுக வசதிகள் :

கப்பல் நிறுத்துமிடம்: 32
துறைமுக மேடை நீளம்: 5.6 கி. மீ
அதிகபட்ச கப்பல் ஆழம்: 15.7 மீ
அதிகபட்ச கப்பல் அளவு: 1,50,000 tonnes deadweight (DWT)
பரப்பளவும்: 127 ஹெக்டேர் சுதந்திர வர்த்தக வலயம், 28 ஹெக்டேர் சுதந்திர வர்த்தக அல்லாத வலயம்