தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் ‘கடல் சிக்கன்’ என்னும் பலூன் மீன்!

pufferfish tamilnadu Rameswaram
Photo: South China Morning Post/FB

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து ‘கடல் சிக்கன்’ என்னும் பெயரில் பலூன் போன்ற வகை மீன்கள் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அதே போல, கணவாய், இறால், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகள் பதப்படுத்தப்பட்டு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதில் தற்போது ராமேஸ்வரம் பகுதிகளிலிருந்து கடல் சிக்கன் என்ற பலூன் மீன்கள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாது மலேசியா, தாய்லாந்து, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இது `சீ சிக்கன்’ என்ற பெயரில் பிரபலமாகி, ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது, ஆனால் தமிழகத்தில் இந்த வகை மீன்கள் உணவாகப் பயன்படுவதில்லை.

வங்களா விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய கடல்களின் ஆழம் குறைந்த பகுதியில் அந்த பலூன் வகை மீன்கள் அதிகம் காணப்படுகின்றன.