சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட பகுதியில் மது அருந்தினால் என்ன தண்டனை? மறந்தும் செய்யக்கூடாதவை!

selling-liquor-rules-amendment

சிங்கப்பூரில் பொது இடத்தில் சட்டவிரோதமாக மது அருந்திய குற்றத்திற்காக ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் $1,000க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படுவார். அந்த நபர் மீண்டும் மீண்டும் குற்றவாளியாக இருந்தால், $1,000க்குக் குறையாத அபராதம் $2,000க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும்.

சில நேரங்களில் மூன்று மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை அல்லது அபராதமும், சிறை தண்டனை என இரண்டும் சேர்த்தே விதிக்கப்படும். மதுபானக் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் இதே போன்ற குற்றம் செய்தால்  1.5 மடங்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.

மதுபானக் கட்டுப்பாட்டு மண்டலங்கள் என்றால் என்ன?

ஏப்ரல் 1, 2015 முதல், பொது இடங்களில் தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 7.00 மணி வரை மது அருந்துவது கட்டுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக, Geylang மற்றும் Little India ஆகியவை மதுபானக் கட்டுப்பாட்டு மண்டலங்களாக (LCZ) அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு பொது இடங்களில் மது அருந்துவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் இருக்கும்.

அங்கே சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் திங்கட்கிழமை காலை 7.00 மணி வரை கட்டுப்பாடு அமலில் இருக்கும். பொது விடுமுறைக்கு முன்னதாக இரவு 7.00 மணி முதல் பொது விடுமுறைக்கு மறுநாள் காலை 7.00 மணி வரை கட்டுப்பாடு தொடரும்.

பின்வரும் நிகழ்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது:

அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளின் போது மது அருந்துதல்,
பொது நோக்கத்திற்காக சட்டப்பூர்வ வாரியங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளின் போது மது அருந்துதல் இதில் அடங்கும்.

Parks and Trees Act (Cap. 216) சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்ட தேசிய பூங்காவில் பார்பிக்யூவில் கலந்துகொள்ளும் நபர்கள் மது அருந்தலாம்.