எதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்ந்தது ? – சிங்கப்பூரின் எரிபொருள் ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள்

Pic: The Star

சிங்கப்பூரில் எரிபொருள் விலையை நிலைப்படுத்தவும் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தவும் எரிசக்தி சந்தை ஆணையம் ஏற்கனவே தான் நடப்புக்கு கொண்டுவந்த நடவடிக்கைகளை மார்ச் 2023 வரை நீடித்துள்ளது.

உலகில் நிலவி வரும் படையெடுப்பு காரணமாக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி,இறக்குமதிகள் பாதிக்கப்பட்டன.சர்வதேச நிலவரம் காரணமாக சிங்கப்பூரில் மின்விநியோகமும் உள்ளூர் எரிசக்திச் சந்தைகளின் செயல்பாடும் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பது உயிர்நாடியானது என்று ஆணையம் குறிப்பிட்டது.

மின் பற்றாகுறையால் மின்கட்டணம் அதிகரித்து வருகிறது.ஆணையம் எரிபொருள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை கடந்த ஆண்டு செப்டெம்பரில் நடைமுறைப் படுத்தியது.

Sembcorp Powerநிறுவனமும் Keppel electric நிறுவனமும் சராசரியாக குறிப்பிட்ட அளவிலான மின்சாரத்தை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு தொடர்ந்து நீண்டகால நிலையான கட்டணத் திட்டங்களை வழங்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து சூழ்நிலையை ஆணையம் கண்காணித்து வரும்.வேண்டுமெனில் இந்த நடவடிக்கைகள் மேலும் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 95 விழுக்காடு இறக்குமதியாகும் இயற்கைவாயுவிலிருந்து தன்னுடைய மின்சாரத் தேவையை சிங்கப்பூர் பூர்த்தி செய்து கொள்கிறது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து உலகம் முழுவதும் எரிவாயு விலை உயர்ந்தது.அதேசமயம் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக எரிவாயு,எண்ணெய் கட்டமைப்பு பாதிக்கப்படும் அபாயமும் அதிகரித்தது.

எரிபொருள் சந்தை விதிமுறைகள் திருதப்பட்டதோடு ,தற்காலிக மின் ஒப்பந்த ஆதரவு திட்டத்தையும் ஆணையம் நீட்டிக்கிறது.இந்த ஆதரவு திட்டமானது மொத்த விற்பனை மின் சந்தையில் விலைகள் ஏறி இறங்குவதால் அதிகளவில் எரிசக்தியை பயன்படுத்துவோருக்கு எற்பட்டக்கூடிய பாதிப்பைக் குறைத்துக் கொள்ள உதவும்