மறுவிற்பனை சந்தையில் செர்ஸ் பிளாட்களை விற்பதற்கான அளவுகோலில் மாற்றம் – குறைந்தது இத்தனை ஆண்டுகளா !

SERS resale HDB flats in singapore houses payment

சிங்கப்பூரில் செர்ஸ் திட்டத்தின் கீழ் மாற்று அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குபவர்கள் தங்கள் யூனிட்களை திறந்தவெளிச்சந்தையில் எப்போது விற்க முடியும் என்பதற்கான நிபந்தனைகளை வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியமான HDB சரி செய்துள்ளது.

ஏப்ரல் 7 அல்லது அதற்குப் பின்னர் செர்ஸ் திட்டத்தின் கீழ் வாங்குபவர்கள் சாவிகளைப் பெற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின் மட்டுமே தங்கள் குடியிருப்புகளை விற்க முடியும் என HDB தெரிவித்துள்ளது. இந்நிபந்தனைகளின் கீழ், வீட்டு உரிமையாளர்கள் தங்கள் யூனிட்டை மாற்று பிளாட் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகள் அல்லது சாவிகளைப் பெற்ற தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் பின்னர் விற்கலாம்.

இந்த செர்ஸ் திட்டம் 1995 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆரம்பத்தில் பழைய வீடுகளை புதுப்பிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் செர்ஸ்சும் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டத்தின் கீழ், குடியிருப்பாளர்களுக்கு அருகிலுள்ள புதிய வீடுகள் வழங்கப்படுகின்றன, அதே நேரத்தில் பழைய தளத்தில் மீண்டும் மராமத்து பணிகள் செய்யப்படும்.

மாற்று அடுக்குமாடி குடியிருப்புகள் தற்போது 99 ஆண்டு குத்தகையுடன் வருகின்றன, மேலும் தகுதியுள்ள பிளாட் உரிமையாளர்கள் S$30,000 வரை செர்ஸ் மானியத்தைப் பெறலாம் என்றும் அவர்கள் தங்களுடைய மாற்று பிளாட் வாங்குவதற்கு HDB யிலிருந்து வீட்டுக் கடனையும் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.