எவ்வளவு காலம் மலேசியாவில் கோழி ஏற்றுமதி தடை? – சிங்கப்பூர் கோழி சப்ளையர்கள் கவலை

Chicken
Motherhsip

மலேசியா எதிர்வரும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கோழி ஏற்றுமதிக்கு தடையை அறிவித்துள்ளது. மலேசியாவின் அறிவிப்பை அடுத்து சிங்கப்பூரில் கோழி விற்பனையாளர்கள் பிற நாடுகளிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்வது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

குளிரூட்டப்பட்ட கோழிகளின் இறக்குமதியை அதிகரிக்கவோ அல்லது மலேசியா அல்லாத விநியோகிப்பாளர்களிடம் உறைந்த கோழிகளின் இறக்குமதியை அதிகரிக்கவோ இன்னும் தாமதம் ஏற்படும் என்று இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

இறக்குமதி ஏற்றுமதி சங்கிலியை செயல்படுத்த சிங்கப்பூர் உணவு முகமை பரிந்துரைத்தாலும் ,அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய சப்ளையர்கள் முயற்சித்தாலும் தாமதம் ஏற்படும் என்று சிங்கப்பூரின் கோழி வியாபாரிகள் சங்க செயலர் தெரிவித்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

கோழிகளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக முன் பதிவு செய்தாலும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே கோழிகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். கோழி வினியோகம் குறைந்து ,தேவை தொடர்ந்து அதிகரிக்கும் போது குளிரூட்டப்பட்ட கோழிகளின் விலை கட்டுப்படுத்த முடியாமல் உயரும் என்று கூறப்படுகிறது.

மலேசியாவில் ஏற்றுமதி தடைகள் அமல்படுத்தப்பட்ட உடன் சிங்கப்பூரில் உள்ள கோழி வணிக நிறுவனங்களின் வருவாய் 60% குறையும் என்று இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

மலேசியாவின் தடை குறுகிய காலம் இருக்குமா அல்லது இல்லையா என்பது தெரியாததால் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் மேலும் அடுத்த நடவடிக்கையில் SFA உடன் நெருக்கமாக பணியாற்றுவோம் என்றும் சிங்கப்பூர் கோழிப்பண்ணை நிறுவனத்தின் வணிக மேம்பாட்டு தலைவர் கூறினார்.