வேலைவாய்ப்பு பெருகுமா? சிங்கப்பூரில் 2022 ஆம் ஆண்டு வரை அனைத்துத் துறைகளிலும் இதே நிலைமை தான்!

AP/Rishi Lekhi

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் (MoM) மனிதவள ஆராய்ச்சி மற்றும் புள்ளியியல் துறையானது, சிங்கப்பூரில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி, தனது வருடாந்திர தொழிலாளர் அமைப்பு குறித்த முன்கூட்டிய கணிப்பை வெளியிட்டது.

இந்த அறிக்கை காலாண்டு தொழிலாளர் சந்தை அறிக்கைகளில் உள்ளடக்கப்படாத வேலைவாய்ப்பு விகிதம் மற்றும் வருமான வளர்ச்சி போன்ற தொழிலாளர் சந்தை குறித்த தரவுகளை உள்ளடக்கியிருந்தது.

15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்களுக்கான வேலைவாய்ப்பு விகிதம் ஜூன் 2020 இல் 64.5% இலிருந்து ஜூன் 2021 இல் 67.2% ஆக உயர்ந்தது.

இது பொருளாதார மீட்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி ஊக்குவிப்பு போன்ற நடவடிக்கைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.

முழுநேர வேலையில் இருப்பவர்களின் பெயரளவு சராசரி வருமானம் ஜூன் 2020ல் (-0.6%) குறைந்து இருந்தது. இது  ஜூன் 2021ல் 3.2% அதிகரித்துள்ளது. பணவீக்கத்தைக் கணக்கிட்ட பிறகு, உண்மையான சராசரி வருமான வளர்ச்சி குறைவாக இருந்தது. ஆனால் 2020 இல் 0.4% சரிவை ஒப்பிடும்போது, 1.1% ஆக நேர்மறையாக இருந்தது.

2021 ஆம் ஆண்டில் தொழிலாளர் சந்தை படிப்படியாக மீண்டு வருவதாக MoM முடிவு செய்தது, இருப்பினும் அது முழுமையாக COVID-க்கு முந்தைய நிலைமைகளுக்கு திரும்பவில்லை.

தொழிலாளர் சந்தையின் மீட்சியானது ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடரும் என்றும் 2022 ஆம் ஆண்டு வரை அனைத்துத் துறைகளிலும் மந்தநிலை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.