அதிகரிக்கும் கடை விலை: வருத்தத்தில் வாடிக்கையாளர்கள்

சிங்கப்பூரில் காபி கடைகளின் விற்பனை விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருவதாகவும் இன்னும் பல கடைகள் அதிக விலைக்கு கைமாறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் “21 ஸ்திரீட் ஈட்டிங் ஹவுஸ்” என்ற கடை சுமார் $41.68 மில்லியனுக்கு விலைபோனதாகவும் இந்த கடையானது தெம்பனிஸ் ஸ்திரீட் 21 புளோக் 201ல் இயங்கிவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் Work pass அனுமதியை நீட்டித்து தர கோரிக்கை வைக்கும் ஊழியர்கள் – காரணம் என்ன?

இன்னும் பல காபி கடைகள் வரலாறு காணாத அளவில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது, மேலும் விற்கப்பட்ட காபி கடைகளின் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதால் கடையின் வாடகை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் அந்த கடைகளின் உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என்று வாடிக்கையாளர்கள் வருத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்த காபிக்­கடைகள் அதிகமான விலைக்கும் கைமாறிவருவது குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ பேசியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கடைகள் குறைவான விகிதாசாரம் கொண்டவைதான் என்றும் அவர் கூறியதாக தெரிவித்துள்ளது.

இந்த காபிக்­கடைகள் அதிகமான விலைக்கு கைமாறிவருவது பலரின் கவனத்தை கவர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் சிங்கப்பூரில் உரிமம் பெற்ற 1100 காப்பிக்கடைகள் இருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் உணவுப்பொருட்களின் விலை குறைவாக இருக்கும் கடைகளையே நாடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

‘சிங்கப்பூரில் இரண்டு சிறுமிகளை காணவில்லை’- தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்!