சிங்கப்பூரில் அதிகரிக்கும் முட்டை விலை: S$6.15 என இருந்த 30 முட்டை, S$7.20 க்கு விற்பனை!

Singapoe eggs-price-increase

சிங்கப்பூரில் முட்டையின் விலை உயர்ந்துள்ளது. இரண்டு உள்ளூர் சூப்பர் மார்க்கெட்களில் 30 முட்டைகள் கொண்ட ட்ரேயின் விலை S$7.20 என்றும், இது ஒரு மாதத்திற்கு முன்பு S$6.15 ஆக இருந்தது என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது,

கடந்த 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து முட்டையின் விலைகள் சுமார் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளன என்றும் அது கூறியுள்ளது.

சிங்கப்பூரில் 100 நாட்களுக்கு மேலாக தமிழக ஊழியரை காணவில்லை; மீட்டுத்தர மத்திய அரசிடம் கோரிக்கை!

குறுகிய காலத்துக்கு இந்த விலை அதிகரிப்பு இருக்கும் என்றும், ஆனால் மீண்டும் குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு முட்டை தட்டுப்பாடு ஒரு காரணமல்ல என்றும், ஆனால் சில காரணிகள் உள்ளதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

உலகளாவிய பணவீக்க உயர்வு காரணமாக அதிக செலவுகள் ஏற்படுகின்றன என்றும், அதே சமயம் கோழி தீவனங்களின் அதிக விலைகள் மற்றும் ஆள் பற்றாக்குறை போன்ற தளவாட செலவுகள் காரணமாக இது ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

மலேசியா, போலந்து, தாய்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் முட்டைகளைப் இறக்குமதி செய்கிறது.

ஆழமான வடிகாலில் விழுந்த சிங்கப்பூர் பெண்ணின் AirPod: கனமழையிலும் ஓடிச்சென்று உதவிய “வெளிநாட்டு ஊழியர்”!