உலகளாவிய விமான போக்குவரத்து மீட்பு பயிற்சி திட்டத்தை வழங்கும் சிங்கப்பூர் – ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தலைவர்கள்

singapore aviation rebuilding juan han agreed

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு( ICOA) ஆனது வியாழன் அன்று விமானப் போக்குவரத்து மீட்பு மற்றும் பின்னடைவு குறித்த உலகளாவிய பயிற்சித் திட்டத்தை சிங்கப்பூருடன் ஒருங்கிணைந்து கூட்டாக உருவாக்கி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ICAO அமைப்பின் ஒப்பந்த மாநிலங்களின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனர் ஜெனரல்களை ,அவர்கள் அந்தந்த துறைகளை மீண்டும் கட்டியெழுப்பும் போது புதிய திறன்கள் மற்றும் போட்டிகளை இந்தத் திட்டம் கொண்டிருக்கும் என்று (CASS) சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

Covid-19 நெருக்கடி ,விமான போக்குவரத்து பாதுகாப்பு, தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் இணையத்தள பாதுகாப்பு ஆகியவற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அடங்கிய தலைப்புகளில் மே 18 முதல் 19 வரை சிங்கப்பூரில் நடைபெறும். ஒப்பந்தம் குறித்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும்.

சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனர் ஜெனரல் Han Kok Juan மற்றும் மற்றும் ICAO-வின் பொதுச் செயலாளர் Juan Carlos Salazar ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஜெனரல் Han “ விமான போக்குவரத்து மீள்திறனைக் கட்டியெழுப்புவதற்கான முதன்மை பயிற்சியில் ICAO உடன் இணைந்து பணியாற்றுவதில் சிங்கப்பூர் மிகுந்த மரியாதை கொள்கிறது ” என்று கூறினார்.

ICAO -வின் பொதுச் செயலாளரான Salazar சிங்கப்பூரில் தனது நான்கு நாள் பயணத்தின்போது சிங்கப்பூர் விமான போக்குவரத்து துறையை சேர்ந்த கார்ப்பரேட் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தொழில் சங்க பிரதிநிதிகளுடன் வட்டமேசை கூட்டத்தில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்