சிங்கப்பூர் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியரான அங்கிதி போஸ் – விசாரணையில் வெளியான உண்மை என்ன?

angiti ceo

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பேஷன் ஸ்டார்ட்அப் நிறுவனமான Zilingo-வின் (CEO) தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்த இந்தியரான Ankiti Bose கடுமையான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.குற்றச்சாட்டுகள் குறித்த தீவிர விசாரணைக்கு பிறகு அவரை பதவி மற்றும் பணிநீக்கம் செய்ததாக வெள்ளிக்கிழமை அன்று மின்னஞ்சல் வாயிலாக நிறுவனம் அறிவித்தது.

Zilingo நிறுவன தலைமை அதிகாரியை பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட செய்தி சிங்கப்பூர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய ஸ்டார்ட்டர் நிறுவனங்களுக்கு இடையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிதி மோசடி காரணமாக ஏப்ரல் 12ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒட்டு மொத்தமாக நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அங்கிதியின் முறைகேடுகள் குறித்து நிறுவனத்தின் பங்குதாரர்கள் ,நிர்வாகக்குழு உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட நீண்ட கால விசாரணைக்குப் பிறகு தற்போது முடிவுக்கு வந்தது.

நிறுவனத்தில் நடந்த நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய தனிப்பட்ட தடயவியல் அமைப்பை நிறுவனம் நியமித்தது. தடயவியல் குழு நடத்திய விசாரணையில் முறைகேடுகள் தொடர்பான பல உண்மைகள் வெளியானதை தொடர்ந்து நிறுவனம் அங்கிதியை பணிநீக்கம் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த புகார்களை விசாரணை செய்ய Zilingo நிறுவனம் Deloitte நிறுவனத்தை நியமித்தது. Zilingo நிறுவனத்திற்கு முன்னதாக அங்கிதி போஸ் சிகோயா கேப்பிட்டல் என்னும் நிறுவனத்தின் பணியாற்றியுள்ளார். இந்த நிறுவனத்திடம் இருந்து Zilingo 200 மில்லியன் டாலர் முதலீட்டை 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் திரட்ட முயன்ற போதுதான் நிதி முறைகேடுகள் குறித்த பிரச்சனை வெளியானது.