இந்தியாவின் தூய்மைக்கு மானியம் வழங்கும் சிங்கப்பூர் DBS – பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த இந்தியாவுடன் சிங்கப்பூர்

singapore dbs bank provide fund to india for control plastic wastage and pollution

சிங்கப்பூரின் நட்பு நாடான இந்தியா நிலம் மாசுபடுதலை கருத்தில் கொண்டு தற்போது ஒருமுறை மட்டும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளது. எதிர்வரும் ஜூலை 1 முதல் இந்தியாவின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அரசாங்கம் விரைவில் (Single use) பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவு மாசுபாட்டை கட்டுப்படுத்த இந்த தடை மட்டும் போதாது என்று மாசுபடுதல் நிபுணர்கள் சிங்கப்பூரின் செய்தி ஊடகமான CNBC -யிடம் பேட்டியில் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் நல்லுறவை மேம்படுத்துவதற்கு சிங்கப்பூருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

இந்திய நகரங்களில் அதிகரித்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துவதற்கு துணையாக சிங்கப்பூர் முன்வந்துள்ளது .2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை கண்காணிக்க ,கழிவு நுண்ணறிவு தளத்தை பயன்படுத்தி ,பெரு நிறுவனங்கள் மற்றும் நகர அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் நிறுவனம் Recity Network ஆகும்.

இந்த நிறுவனத்தின் தளத்தை பயன்படுத்துவதன் மூலம் நகரங்களில் கழிவுகளின் அளவு மற்றும் இயக்கம் பதிவு செய்யப்படும். பின்னர் உயர்தர பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மறுசுழற்சிக்காக மீண்டும் உற்பத்தியாளர்களிடம் அனுப்பி வைக்கப்படும் .

இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துவதற்கு சிங்கப்பூரின் DBS அறக்கட்டளை வழங்கும் மானியம் ,Recity Network அதன் திட்டங்களை செயல்படுத்தவும் கட்டமைக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூர் DBS அறக்கட்டளையால் வழங்கப்படும் மானியம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க உதவும் என்று Recity Network தெரிவித்துள்ளது