உணவகங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பேர் வரை குழுவாக சாப்பிட அனுமதி!

foreigner fined warning spore
Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுமார் 10 பேர் கொண்ட நபர்கள் ஒரே குழுவாக உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம்.

வரும் மார்ச் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் 10 பேர் கொண்ட குழு உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடியும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிமுறைகள் அதிரடி தளர்வு – என்னென்ன? வாங்க பார்ப்போம்!

வாடிக்கையாளர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனரா என சோதனைகளை மேற்கொள்ளும் உணவு நிலையங்கள் மற்றும் காப்பி கடைகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.

இருப்பினும், எந்தவித சோதனைகளையும் மேற்கொள்ளாத கடைகளும் உண்டு அதுபோன்ற உணவகங்களில் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 பேர் மட்டுமே ஒரே குழுவாக அமர்ந்து சாப்பிட முடியும்.

அதே போல, மார்ச் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் இரவு 10 30 மணிக்கு பிறகு மது விற்பனை செய்யலாம் என்றும், அருந்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே போல நேரலையில் நிகழ்ச்சிகளை மீண்டும் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Breaking: VTL விமானங்கள் தேவையில்லை… அனைத்து பயணிகளும் ஏப்ரல் 1 முதல் தனிமையின்றி சிங்கப்பூர் வரலாம்!