2001ல் சிங்கப்பூருக்கு இப்படியொரு நிலை வந்ததா? யாருமே எதிர்பார்க்காத கசப்பான வரலாறு!

2001ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாகச் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.2% குறைந்தது.

இதனால் 2001 டிசம்பரில் பொருளாதார மீளாய்வு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு அது பொருளாதாரத்தைச் சீரமைக்க பல்வேறு கொள்கைகளைப் பரிந்துரைத்தது.

உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியால் சிங்கப்பூர் மந்தநலையிலிருந்து மீண்டது. 2004ல் 8.3விழுக்காடு 2005ல் 6.4 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது.

2006ல் 7.9 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. 2009ல் 0.8 விழுக்காடு வளர்ச்சி குறைந்து 2010ல் பொருளாதாரம் மீண்டு 14.5 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது.

சேவைத் துறையிலேயே பெரும்பாலானவர்கள் வேலை செய்கிறார்கள். டிசம்பர் 2010 கணக்குப்படி 3,102,500 பணியிடங்களிலில் 2,151,400 பணியிடங்கள் சேவைத் துறையைச் சார்ந்தது ஆகும்.

15 வயதுக்கு மேற்பட்டவர்களில் வேலை வாய்ப்பில்லாமல் இருப்பவர்கள் 2 விழுக்காடு ஆகும்.

விழுக்காடு கணக்கில் சிங்கப்பூரிலேயே அதிக மில்லியனர்கள் உள்ளனர். ஆறு வீடுகளில் ஒரு வீடு நிலம், வணிகம், வீடு, ஆடம்பர பொருட்கள் இல்லாமல் மில்லியன் அமெரிக்க வெள்ளியை கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு மிகவும் அதிகமாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்த நாடாக இருந்த போதிலும் இங்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது தீர்மானிக்கப்படவில்லை. முன்னேற்றமடைந்த நாடுகளில் இங்கு ஊதிய ஏற்றத்தாழ்வு மிக அதிகம்.

சிங்கப்பூர் உலகின் நான்காவது முன்னணி நிதி மையமாக உள்ளது. சூதாட்டத்திற்கான இரண்டாவது பெரிய சந்தையாகவும் திகழ்கிறது.

அதிக பொருட்களைக் கையாளும் உலகின் முன்னணித் துறைமுகங்களில் சிங்கப்பூர் துறைமுகமும் ஒன்றாகும்.

உலக வங்கி வணிகம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் மிகக்குறைந்த இடம் எனச் சிங்கப்பூரைத் தெரிவு செய்துள்ளது