மெதுவான வளர்ச்சி மட்டுமே உள்ளது – சிங்கப்பூர் நாணய ஆணையம் கடுமையாக்கியுள்ள நாணயக் கொள்கை

சிங்கப்பூர் பொருளாதாரம் இந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான வளர்ச்சியடைந்துள்ளது.பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் உலகளாவிய பொருள் சேவைகளுக்கான உள்நாட்டுத் தேவை குறைந்து வருவதை இது குறிக்கிறது.இந்நிலையில் சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் நாணயக் கொள்கையை மேலும் கடுமையாக்கி உள்ளது.

உலகளாவிய விலைவாசி உயர்வின் தாக்கத்தை தணிக்க இது உதவும்.மேலும்,சிங்கப்பூர் வெள்ளி வலுவடைய இது வழிவகுக்கிறது.பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்து இருப்பதையும் ,நாணய ஆணையத்தால் அதன் நாணயக் கொள்கை கடுமையாக்கப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது,பொருளாதார வளர்ச்சியை விட அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில்,இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை.கணிசமாக பொருளாதார வளர்ச்சி மெதுவடைந்திருப்பது இதிலிருந்து புலப்படுகிறது.சிங்கப்பூரின் உள்நாட்டு உற்பத்தி எதிர்வரும் ஆண்டு மேலும் மிதமடையக் கூடும் என்று நாணய ஆணையம் எச்சரித்துள்ளது.

முன்னதாக,நாட்டில் பணவீக்கம் 2.5 சதவீதத்திற்கும் 3.5 சதவீதத்திற்கும் இடைப்படிருக்கும் என்று முன்னுரைக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு பணவீக்கம் 3 சதவீதத்திற்கும் 4 சதவீதத்திற்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்று தற்போது ஆணையம் தெரிவித்துள்ளது.