சிங்கப்பூரின் சாத்திய எதிர்காலம் இப்படியும் இருக்கலாம் ! – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

singapore economy mnc firm

தனது வார்த்தைகளை துளியும் பொருட்படுத்தாத, பீப்பிள்ஸ் ஆக்க்ஷன் பார்ட்டியின் (PAP), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் (MP) தொழிலதிபருமான 61 வயதான இந்தர்ஜித் சிங், சிங்கப்பூருக்கான சாத்தியமான எதிர்காலத்தை பற்றி கூறியுள்ளார்.

அர்த்தமுள்ள வேலைகளை நிறுத்துகின்ற நாளில், நாம் தொழிலாளர்களின் நிகர ஏற்றுமதியாளராக இருப்போம் என்றும் அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்க்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளர்.

எதிர்கால சந்ததியினருக்கு, அர்த்தமுள்ள வேலைகளை வழங்கக்கூடியதும், உள்ளூர் வணிகங்களுக்கான வலுவான மையத்தை உருவாக்குவதற்கு சிங்கப்பூர் இன்னும் அதிகமாக செயல்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்து (MNCs), உள்ளூர்ப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவது அடுத்த பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேலும் செயல்படலாம். MNC கள் இருப்பது, பொருளாதாரத்திற்கு பங்களிப்பதோடு, சிங்கப்பூரர்களுக்கு “மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்புகளை” வழங்குகிறது என்றும் கூறியுள்ளார்.

ஆனால், MNCகளின் பொருளாதாரப் பங்களிப்புகள் SME களில் இருந்து வேறுபட்டவை என்பது உண்மைதான். (SME – Small and Medium-sized Enterprises). MNC களுக்கான ஊக்கத்தொகைகளை வழங்கி, அதில் சிங்கப்பூர் திரும்பப்பெறுவது , புதிய மற்றும் முக்கியமான துறைகளை வளர்ப்பதற்கு MNCகளின் வடிவத்தில் உதவிகள் தான்.

அடுத்த தலைமுறையைச் சார்ந்த சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு ஆதரிக்க, இன்னும் பலவற்றைச் செய்ய முடியும் என்றும் சிங் கூறியுள்ளார்.

மேலும் சிங்கப்பூரர்கள் ரிஸ்க் எடுக்க பயப்படுவது SMEகளை பின்தள்ளுகிறது என்றும் , எதிர்கால பொருளாதாரத்தை இது பாதிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.