தைரியமா வேலை பார்க்கலாம்.. எந்த நிலையிலும் சிங்கப்பூர் பொருளாதாரத்தை அசைக்க முடியாது – அசர வைக்கும் காரணங்கள்!

திடீரென "உங்களுக்கு வேலை இல்லை" என்றதும் ஊழியர்கள் அழுது புலம்பியதாவும், என்ன செய்ய போகிறோம் என்று
(Photo: Reuters)

தற்போதைய சிங்கப்பூர் சந்தை பொருளாதாரத்தின் மூலம் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது.

சிங்கப்பூரின் பொருளாதாரம் முதலீட்டாளர்க்கு உகந்ததாகவும் வணிக கட்டுப்பாடுகள் குறைந்ததாகவும் உள்ளது. உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்று.

சிங்கப்பூர் உலகின் 14வது பெரிய ஏற்றுமதியாளராகவும் 15வது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது.

மூன்று கடன் மதிப்பீடு நிறுவனங்களின் நாணயநிலை மதிப்பீட்டில் ஆசியாவில் சிங்கப்பூர் மட்டுமே உயர் மதிப்பீடு (AAA) பெற்ற நாடாகும் .

ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா ஆகியவற்றின் 7,000க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன.

1500 சீன, இந்திய நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. இங்குள்ள அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவின் இரண்டாவது பெரிய அன்னிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும். சிங்கப்பூரின் தொழிலாளர்களில் கிட்டதட்ட 44 விழுக்காட்டினர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினராகும்.

சிங்கப்பூர் பத்தாவது பெரிய வெளிநாட்டு நிதியிருப்பை கொண்டுள்ள நாடாகும். சிங்கப்பூரின் நாணயம் சிங்கப்பூர் வெள்ளியாகும், இதை வெளியிடுவது சிங்கப்பூர் பண அதிகார அமைப்பாகும்.

சிங்கப்பூர் பொருளாதாராம் ஏற்றுமதியையே பெரிதும் நம்பி உள்ளது. இயந்திர பொறியியல் துறை, உயிரிமருத்துவ அறிவியல் துறை, வேதிப்பொருட்கள், மின்னனு பொருட்கள் போன்றவை ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கின்றன.

சிறிய நாடாக இருந்தபோதிலும் சிங்கப்பூர் பன்முகத்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை கொண்டுள்ளது.

இந்த உத்தியால் ஏதாவது ஒரு துறையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது நாட்டின் வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் பாதிக்காதென அரசு கருதுகிறது