சிங்கப்பூரில் மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் – மின் கட்டணம்மற்றும் எரிசக்திகளின் விலை உயர்த்தப்படும்

singapore electricity consumers should have prepared to pay electricity prices gas prices even prices hike

ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் காரணமாக சிங்கப்பூரில் மின்சாரக்கட்டணம் சமீபத்தில் 10 விழுக்காடு அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து எரிசக்தி பொருட்களின் விலைகளும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது.இந்நிலையில் பாராளுமன்றத்தில் வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான அமைச்சர் Tan See Leng மின்சார நுகர்வுக்கு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்து பேசினார்.

“சிங்கப்பூரின் எரிசக்தி விலைகளில் அதிகமான ஏற்ற இறக்கங்களை சரி செய்வதற்கு அரசாங்கம் உதவும் என்றாலும் ,மின்சார உபயோகத்திற்கு அதிகாரிகளுக்கு மானியம் வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படாது ” என்று கூறினார்.

” சிங்கப்பூர் ஒரு எரிசக்தி உற்பத்தியாளர் அல்ல. நீண்ட நாட்களுக்கு மின்சாரக் கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவுகளை மின் கட்டணம் பிரதிபலிக்க வேண்டும் ” என்று அமைச்சர் அறிக்கையின் போது Tan அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வணிக செலவுகள் பற்றிய சிக்கல்களை தெரிவித்தார்.

“சிங்கப்பூர் அரசாங்கம் முதலில் எரிசக்திகளுக்கு மானியத்தை வழங்காமல், உள்நாட்டு மின் கட்டணத்தை உலக மின் கட்டணத்தை விட குறைவாக வைத்திருக்க ,மின்சார நுகர்வுக்கு அரசு மானியம் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது ” என்று தெரிவித்தார்.

“காலப்போக்கில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டால், குறிப்பாக எரிசக்திகளின் விலை உயர்த்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ” அறிவுறுத்தினார். சூரிய ஒளி மின்சக்தியை நான்கு மடங்கு பெருக்கி குறைந்தபட்சம் 2 ஜிகாவாட் மின்சாரத்தை சிங்கப்பூரிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் Dr.Tan கூறினார்.