மீண்டும் வேகமான ஏற்றுமதி வளர்ச்சியை காணும் சிங்கப்பூர் – எண்ணெய் மற்றும் மின்னணு சாராத சரக்கு ஏற்றுமதி விகிதம்

Singapore's exports fall 8.9% in August
File Photo

சிங்கப்பூரில் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் எண்ணெய்சாராத ஏற்றுமதி வேகமான வளர்ச்சி அடைந்துள்ளது.கடந்த மாதம் 12.4 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.ஐந்து மாதங்களாக மெதுவான வளர்ச்சி இருந்ததாக எண்டர்ப்ரைசஸ் சிங்கப்பூர் நேற்று தெரிவித்தது.

சென்ற ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி விகிதம் 6.4% அதிகரித்தது.மே மாதத்தில் 7.5% வளர்ச்சி அடையும் என்று Bloomberg நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.மின்னணு சாராதசரக்குகளின் ஏற்றுமதி இந்த வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

மின்னணு சாராத பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு அளவிடும் சாதனங்கள் மற்றும் தனித்துவமான இயந்திரங்கள் பெரிதும் கைகொடுத்தன.ஒவ்வொரு ஆண்டும் மின்னணு சாராத பொருள்களின் ஏற்றுமதி 12.2 சதவீதம் அதிகரித்தது.

மின்னணு துறையின் ஏற்றுமதியும் மே மாதம் உயர்ந்தது.இந்தத் துறையின் அதிகளவிலான ஏற்றுமதிக்கு ஒருங்கிணைந்த மின்சுற்றுகள், பாகங்கள்,கணிப்பொறி வட்டுகள் போன்றவை பெரிதும் உதவின.

இருப்பினும் சிங்கப்பூரின் மருந்தியல் துறை ஏற்றுமதியில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக வீழ்ச்சியைக் கண்டது.ஏப்ரல் மாதம் 6% வீழ்ச்சியடைந்த அதன் ஏற்றுமதி கடந்த மாதம் 8.6% என பெரிய சரிவைக் கண்டது குறிப்பிடததக்கதாகும்.