சிங்கப்பூரின் ஏற்றுமதி கடந்த டிசம்பர் மாதத்தில் 6.8% உயர்வு!

Singapore exports rebound
(Photo from Asiatec Website)

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதிகள் (NODX) கடந்த டிசம்பரில் ஆண்டு அடிப்படையில் 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

முக்கியமாக, சிறப்பு இயந்திரங்கள் (Specialised machinery) மற்றும் நாணயமற்ற தங்கம் போன்ற மின்னணு அல்லாத பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளன.

விமான, கடல்சார் துறைகளில் உள்ள 37,000 ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதிகள்

இதில் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதிகள், நவம்பர் மாதத்தில் 5 சதவீதம் வீழ்ச்சியடைந்த பின்னர், தற்போது வளர்ச்சி கண்டுள்ளது.

மாத அடிப்படையில், சிங்கப்பூரின் ஏற்றுமதிகள் கடந்த டிசம்பரில் 6.6 சதவீதம் உயர்ந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னணு அல்லாத பொருட்களின் ஏற்றுமதி

மின்னணு அல்லாத பொருட்களின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில் 5 சதவீதம் அதிகரித்தது.

இது நவம்பரில் 5.3 சதவீதம் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு இயந்திரங்களின் 30.9 சதவீதம் உயர்வு, இந்த அதிகரிப்புக்கு முக்கிய பங்களிப்பாக இருந்தது.

சிங்கப்பூர் வழியாக சீனா தப்பிய குற்றவாளியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடிய சென்னை போலீஸ்