உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் ஏற்படும் சிக்கல் – சிங்கப்பூரின் எரிசக்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் ஜூன் 30 2022 வரை நீட்டிப்பு

singapore gas supply affected by ukraine russia war

உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெற்று வரும் மோதலின் விளைவாக சர்வதேச நாடுகளில் விலைவாசி உயர்வு,எரிவாயு பற்றாக்குறை போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் பின்னணியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உள்ளது.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக சிங்கப்பூரின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஜூன் 30 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி சந்தை ஆணையம் தெரிவித்துள்ளது .

சிங்கப்பூரில் எரிசக்தி நிலைமையை மேற்பார்வையிடுவதாகவும் ,மேலும் புதிய நடவடிக்கைகளை நீட்டிப்பது குறித்தும் பரிசீலிப்பதாகவும் அறிக்கையில் EMA தெரிவித்துள்ளது.மேலும் இது சிங்கப்பூரின் எரிசக்தி நிலைமையை பொருத்ததாகும்.கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து சிங்கப்பூரில் எரிசக்தி விநியோகத்தை பாதுகாப்பதற்கும் ,எரிசக்தி துறையின் ஒழுங்கான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும் EMA பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

EMA மற்றும் மின் வாரியத்தின் நடவடிக்கைகள் போதுமான எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த உதவியது. மேலும் ஒரே மாதிரியான எரிசக்தி விலையை மின்சார உற்பத்தி செலவில் நிலைப் படுத்தியது. 2021 -ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஒரு மெகாவாட் மணி நேரத்திற்கு $460 ஆக இருந்தது. 2022 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் ஒரு மெகாவாட் -மணி நேரத்திற்கு $350 ஆகும்.