இனி கவலை வேண்டாம் – இந்தோனேசியக் கோழி இறக்குமதிக்கு அனுமதி

chicken from indonesia

சிங்கப்பூரில் கோழி விநியோகத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டதிலிருந்து இந்தோனேசியாவில் இருந்து கோழிகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்தது.தற்போது சிங்கப்பூர் விரைவில் இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கோழிகள் இறக்குமதி செய்யப்படும்.

குளிரூட்டப்பட,உறையவைக்கப் பட்ட கோழி இறைச்சியை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்வதற்கு உரிய நாடாக இந்தோனேசியாவை அங்கீகரித்து இருப்பதாக முகநூலில் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

சிங்கப்பூருக்கு தேவையான கோழிகளை இப்போது அங்கீகரிக்கப்பட்ட இந்தோனேசிய நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்ய முடியும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும்,தாய்லாந்து,ஆஸ்திரேலியா,பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் இப்போது கோழிகளை வாங்குகிறது.இது குறித்து நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுசூழல் அமைச்சர் Grace Fu நேற்று முகநூலில் அறிவித்தார்.

கோழிகளை இறக்குமதி செய்வதற்கு என்று சிங்கப்பூர் 20 நாடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.தற்போது இதில் இந்தோனேசியாவும் சேர்ந்திருக்கிறது.கோழி கொள்முதலை அதிகரிக்கும் முயற்சிகளில் இது மேலும் ஒரு படி என்று அமைச்சர் கூறினார்.

உலகளவில் உணவுப் பொருட்களின் விநியோகம் தொடர்ந்து நிச்சயமில்லாமல்தான் இருக்கும்.இந்த விநியோகத்தில் மேலும் பிரச்சனைகள் ஏற்படலாம்.விலையும் ஏறி இறங்கலாம் என்பதால் அதற்கேற்ப மனதளவில் நாம் மாறிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.சிங்கப்பூரில் உணவுப்பொருள் போதிய அளவுக்கு கிடைப்பதை உறுதி செய்ய அரசாங்கம் நீண்ட கால திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

அதே சமயத்தில் ,இதில் முதலீட்டாளர்களுக்கும் உணவு தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது என்றும் அமைச்சர் Fu கூறினார்.சிங்கப்பூரின் உணவு மீள்திறன் மேம்படுவதற்கும் அவர்கள் உதவலாம் என்று குறிப்பிட்டார்.