சிங்கப்பூருக்குத் தேவையான உணவு மொத்தமும் இங்கிருந்துதான் இறக்குமதியாம்! – மீன்களின் விலையேற்றத்திற்கு நாடாளுமன்றத்தில் கேள்வி!

(Photo: Joshua Lee)

சிங்கப்பூரில் இந்தாண்டின் பிப்ரவரி மாதத்துக்கும் ஆகஸ்ட்டு மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் கடல்சார் உணவுகளின் விலைகள் 4.7 சதவீதம் ஏற்றம் கண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.மீன்,நண்டு போன்ற கடலுணவுகளின் விலை ஏற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) விலையேற்றத்திற்கான காரணங்களை எழுத்துப்பூர்வாமாக வழங்கினார்.தீனி,எரிபொருள் போன்றவற்றில் விலையுயர்வு,காலநிலை மாற்றம்,மோசமான வானிலை போன்றவற்றால் மீன் இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால் மீன்களின் விலை ஏற்றம் அடைந்தது.சிங்கப்பூருக்கு தேவையான உணவுப்பொருட்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் அவ்வப்போது உணவு விநியோகப் பிரச்சினைகளையும் விலைகளின் ஏற்ற இறக்கத்தையும் தவிர்க்க முடியவில்லை என்று அமைச்சர் ஃபூ கூறினார்.இந்த தாக்கத்தைக் கட்டுப்படுத்த வெவ்வேறு இடங்களில் இருந்து உணவுப்பொருட்களைப் பெற முயற்சி எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.சிங்கப்பூருக்குத் தேவையான கடல்சார் உணவுகள் தற்போது சுமார் 80 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டது.