இந்தியாவில் வீடு கட்டும் சிங்கப்பூர் – அரசாங்கத்தின் மானியங்களுடன் இந்தியாவில் வீட்டு வசதி திட்டம்

singapore high commisioner visited india for investments

கடந்த வாரம் இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு சிங்கப்பூரின் உயர் அதிகாரி சைமன் ஓங் சென்றிருந்தார். இந்தியாவின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து மலிவான விலைகளில் கட்டித்தரப்படும் வீடுகளின் திட்டம் குறித்து சைமன் ஊடக சந்திப்பில் பேசினார்.

சிங்கப்பூர் பங்குச் சந்தை கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் உள்ள காந்தி நகரில் அதன் அலுவலகத்தை திறந்து எதிர்வரும் ஜூலை மாதத்தில் தடையற்ற வர்த்தகத்தை தொடங்க உள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான உறவு இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் லீ மக்களவை உள்ள பாதி உறுப்பினர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருப்பதாக கூறியது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சைமன் கூறினார்.

குஜராத்தின் நான்கு மாவட்டங்களான பரோடா, ராஜ்கோட், அகமதாபாத் மற்றும் சூரத் போன்ற பகுதிகளில் சுமார் 15,000 வீடுகளை கட்டுவதற்கு சிங்கப்பூர் நிறுவனமான Surbana Jurong ஒப்புதல் பெற்றுள்ளது. 1 BHK மற்றும் 2 BHK அமைப்புகளில் வீட்டு திட்டங்கள் உள்ளன. அரசாங்கம் 3 லட்சம் ரூபாய் மானியமாக வழங்குகிறது .

திட்டச் செலவு, வீட்டு வடிவமைப்பு, தோட்ட மேலாண்மை மற்றும் சிங்கப்பூரிலிருந்து சில நடைமுறைகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது போன்றவற்றை கண்காணிப்பது சிங்கப்பூர் அரசாங்கத்தின் பங்காகும். அரசாங்கத்தால் கட்டித்தரப்படும் பொது வீடுகள் மோசமானது அல்ல என்று நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் பகுதி விண்வெளி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்கு இஸ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சிங்கப்பூர் ஆர்வம் காட்டி வருவது வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.