பணவீக்கத்தின் விளைவு இப்படித்தான் இருக்குமா? – 13 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சிங்கப்பூரில் பணவீக்கம்

singapore dollar

சிங்கப்பூரில் கடந்த மாதம் மூலாதாரப் பயனீட்டாளர் விலைகள் 13 ஆண்டுகளில் இல்லாத அளவு வேகமாக உயர்ந்தன.மின்சாரம்,உணவு,எரிவாயு பொருள்களின் விலை உயர்வு இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.கடந்த மாதம் மூலாதாரப் பணவீக்கம் 3.6 விழுக்காடாக உயர்ந்தது.ஏப்ரல் மாதம் 3.3 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்வரும் மாதங்களில் சிங்கப்பூரின் மூலாத்தாரப் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து,ஆண்டிறுதியில் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும்,வர்த்தக தொழில் அமைச்சகமும் நேற்று கூறின.2008-ஆம் ஆண்டில் பணவீக்கம் 4.2 விழுக்காடாக இருந்து.நீண்ட காலங்களுக்கு பிறகு பணவீக்கம் இந்த அளவு உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

நாடுகளுக்கு இடையேயான அரசியல் பதற்றநிலை,கடுமையான விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கும்.அதேசமயத்தில் உணவு,இதர பொருட்களின் விலைகளும் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.எண்ணெய் விலை உயர்வுக் காரணமாக,தனியார் போக்குவரத்து பயணக் கட்டணம் 18.5 விழுக்காடு உயர்ந்தது.

உள்நாட்டில் தொழிலாளர் சந்தை தொடர்ந்து இறுக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஊதிய உயர்வுக்கான ஆதரவு நிலவும் என்று அமைச்சகமும் ஆணையமும் விளக்கமளித்தன.சிங்கப்பூர் நாணய ஆணையம் அதிகரித்து வரும் பணவீக்கத்தை தணிக்க கடந்த வருடம் அக்டோபரில் இருந்து நாணயக் கொள்கையை மூன்றுமுறை கடுமையாக்கி உள்ளது.