கடலிலிருந்து நிலத்தை மீட்கும் சிங்கப்பூரின் பலோ திட்டம்? வேற லெவலில் உலகை மிரட்டும் டெக்னாலஜி!

singapore land from sea
singapore land from sea

சிங்கப்பூர் 63 தீவுகளை உடையது, இதில் பெரிய முதன்மை தீவு சிங்கப்பூர் தீவென அழைக்கப்படுகிறது. மலேசியாவின் ஜொகூர் மாநிலத்துடன் இரண்டு சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள இணைப்பு சாலைக்குப் பெயர் ஜொகூர்-சிங்கப்பூர் காசுவல் வே, மேற்கில் உள்ள இணைப்பு சாலைக்கு டுவசு என்று பெயர். சந்தோசா, புளாவ் மேகோங்ர புளாவ் யுபின், ஜூராங் தீவு ஆகியவை மற்ற குறிப்பிடதக்க தீவுகள் ஆகும்.

கடலிலிருந்து நிலத்தை மீட்கும் திட்டம் செயலில் உள்ளது. இதன் காரணமாக 1960ல் 581.5 ச. கிமீ (224.5 சதுர மைல்) இருந்த நிலப்பரப்பு தற்போது் 704 ச.கிமீ (272 சதுர மைல்) ஆக உள்ளது.

2030ம் ஆண்டில் மேலும் 100 ச. கிமீ நிலம் மீட்கப்பட்டுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. சில நிலமீட்பு திட்டங்களில் சிறிய தீவுகள் ஒன்றிணைக்கப்பட்டு பெரிய தீவு உருவாக்கப்படுகின்றன.

1965 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, சிங்கப்பூர் 2014 இல் சுமார் 590 கிமீ 2 முதல் 720 கிமீ 2 வரை வளர்ந்துள்ளது , அதன் மொத்த நிலப்பரப்பில் 22% கடலில் இருந்து மீட்டெடுக்கப்பட்டது.

நகர்ப்புற மறுசீரமைப்பு அதிகாரசபையானது 2030 ஆம் ஆண்டளவில் கூடுதலாக 100கிமீ 2 நிலத்தை மீளப்பெற திட்டமிட்டுள்ளது.

நகரமயமாக்கல் பெரும்பாலான முதன்மை மழைக்காடுகளை அழித்துவிட்டாலும் 5% நிலமானது இயற்கை காடுகளாகப் பாதுகாக்கப்படுகிறது. புகிட் திமா என்பது குறிப்பிடத்தகுந்த அழிக்கப்படாத காடாகும்.

சிங்கப்பூர் அயனமண்டல தட்பவெப்பநிலை உள்ள நாடாகும். ஆண்டு முழுவதும் வெப்பநிலையில் பெரிய மாறுதல்கள் இருக்காது.

அதிகளவு ஈரப்பதம், மழைப்பொழிவு இருக்கும். இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதால் இங்கு வானம் மங்கலாக மூட்டத்துடன் காணப்படும்.