சிங்கப்பூரில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் ஊழியர்கள் கவனத்திற்கு – இத ஒருபோதும் செய்யாதீங்க

unlicensed payment services in Little India

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இங்கிருந்து இந்தியா உட்பட பல வெளிநாடுகளுக்கு தங்கள் சம்பள பணத்தை எக்ஸ்சேன்ஞ் மூலமாக அனுப்பி வைக்கின்றனர்.

பெரும்பாலானோர் சிங்கப்பூர் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அல்லது நிறுவனம், வங்கி மூலமாக முறையாக பணத்தை அனுப்பி வைப்பதுண்டு.

பவர் பேங்கில் ரகசிய கேமரா.. 76 பெண்கள்… 300க்கும் மேற்பட்ட அந்த மாறி வீடியோக்கள் – PR க்கு லாக்

ஆனால், சில ஊழியர்கள் சட்ட திட்டங்களை அறியாமல் அங்கீகரிக்கப்படாத முகவர்கள் மூலமாக பணத்தை அனுப்பி வைத்து மாட்டிக்கொள்கின்றனர்.

இதில் பெரும்பாலானோர் சட்ட திட்ட விவரம் அறியாமல், நேரடியாவோ அல்லது நண்பர்களிடம் கொடுத்தால் அவர்கள் அனுப்பி விடுவார்கள் என்று அறியாமல் செய்கின்றனர்.

அவ்வாறு அங்கீகரிக்கப்படாத நிறுவனம் மூலமாக நாம் பணத்தை அனுப்பி வைத்தால் நாமும் இதில் குற்றவாளியாக கருதப்படலாம்.

கடந்த மே மாதம், லிட்டில் இந்தியா பகுதியில் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அங்கீகரிக்கப்படாத முகவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

வீராசாமி சாலை மற்றும் அப்பர் டிக்சன் சாலையில் உள்ள இரு முகவர்கள் இதில் சிக்கினர். அவர்களிடம் S$1 மில்லியனுக்கும் அதிகமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் வங்கிகள் மூலமாக பணத்தை நம் சொந்த நாட்டுக்கு அனுப்புவது நமக்கும் நம் குடும்பத்திற்கும் நலம் பயக்கும்.

சிறந்த பண பரிமாற்றத்திற்கு ஏமாந்து நாமும் இதில் குற்றாவளியாக மாறி விட வேண்டாம் என்று பொதுநலனுடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

Singapore TOTO முதல் பரிசு வெற்றியாளர் இல்லை.. 2 ஆம் பரிசுடன் சேர்த்து முதல் பரிசையும் தட்டி சென்ற 12 பேர்