சிங்கப்பூரில் மோசடி செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் – மூலதனம் ஒதுக்க OCBC வங்கி உத்தரவு

supervisory actions OCBC MAS

சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS),OCBC வங்கியின் பெயரில் ஏமாற்றப்பட்ட குறுஞ்செய்தி மோசடிகளுக்கு கூடுதல் மூலதன தேவையை சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) வியாழக்கிழமை அன்று (May 26) விதித்துள்ளது. OCBC வங்கி சுமார் S$330 மில்லியனை ஒழுங்குமுறை மூலதனமாக ஒதுக்க வேண்டும். மோசடி அபாயத்திற்காக வங்கி அதன் இடர் நிறைந்த சொத்துக்களை விட 1.3 மடங்கு அதிகமாக ஒதுக்க வேண்டும்.

வங்கியின் வழக்கை கையாள்வதில் மேற்பார்வை நடவடிக்கைகள் சம்பவம் தொடர்பான சிக்கல்கள் போன்றவற்றை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து MAS பரிசீலிப்பதாக கூறியது.

வங்கி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Helen Wong ,இந்த மோசடிகள் முன்னோடி இல்லாதது என்று 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவித்தார்.ஏனெனில் மோசடி செய்பவர்களின் தந்திர செயல்கள் முந்தைய மோசடிகளில் காணப்படாத செயல்களாக இருந்ததாக தெரிவித்தார்.

இந்த மோசடிகளை தவிர்க்க 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்வேறு நடவடிக்கைகளை OCBC. மேற்கொண்டதாக Wong கூறினார். ஆனால் மோசடி தாக்குதல்களின் தொடக்க அறிகுறிகளுக்கு வங்கி விரைந்து பதில் அளித்திருக்க வேண்டும் என்பதையும் ஒப்புக் கொண்டார்.

வங்கியில் ஒழுங்குமுறையை மதிப்பாய்வு செய்ய தனிப்பட்ட நிறுவனத்தை ஈடுபடுத்தியது. வங்கியின் மோசடி எதிர்ப்பு செயல்முறைகள் மற்றும் அமைப்புகள் ,செயல் மேலாண்மை மற்றும் புகார்களை கையாளுதல் போன்றவற்றை மதிப்பாய்வு செய்த வங்கியின் சுயாதீன ஆலோசகர் கண்டுபிடித்த சிலவற்றையும் Wong பகிர்ந்து கொண்டார் .டிசம்பர் 2021-ல் சுமார் 469 வாடிக்கையாளர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளனர்.