சிங்கப்பூரில் சில்லறை விற்பனையின் நிலை ! – ஆய்வாளார்கள் எதிர்பார்த்த அளவை விட மெதுவடைந்த வளர்ச்சி

(Photo Credit: Business Times)

சிங்கப்பூரில் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் சில்லறை விற்பனை 13% அதிகரித்தது.ஆனால் அதற்கு முந்தைய ஜூலை மாத சில்லறை விற்பனையின் 13.9 சதவீதத்தைக் காட்டிலும் விற்பனை சற்று சரிந்துள்ளதாக புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.

புளூம்பெர்க்கின் பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்த்ததைவிட ஆகஸ்ட் மாத விற்பனை வளர்ச்சி மெதுவடைந்தது.ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சில்லறை விற்பனை 15.4 சதவீதத்தை எட்டும் என்று அவர்கள் முன்னறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மோட்டார் வாகன விற்பனையத் தவிர்த்து கணக்கிடும்போது சில்லறை விற்பனை ஆண்டுக்காண்டு அடிப்படையில் 16.2 சதவீதம் வளர்ச்சியைக் கண்டது.இருப்பினும் ஜூலை மாத 18.4 சதவீதத்தை விட இது குறைவுதான்.

சில்லறை வணிகத்தில் வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியைச் சந்த்தித்தது.இந்தாண்டுக்கான வாகன பதிவுச் சான்றிதழ் குறைவாக ஒதுக்கப்பட்டதில் இருந்து வாகன விற்பனை 7.9 சதவீதம் வீழ்ந்தது.

மாதாந்திர அடிப்படையில் பெரும்பாலான துறைகளில் விற்பனை சரிந்துள்ளது.சில்லறை வர்த்தகத்தில் இடம்பெற்றுள்ள 14 துறைகளில் 10 வீழ்ச்சியடைந்துள்ளன.இவற்றில் இருப்பதிலேயே குறைவான வளர்ச்சியை பெட்ரோல் சேவை நிலையங்கள் சந்தித்தன.