புதிய வாடகை 100 சதவீதம்.. பழைய வாடகை 75% உயரும் – செலவு மிகுந்த நகரமாக மாறும் சிங்கப்பூர்

Increase in vacancies in Singapore - Rents will fall sharply
(Photo: Facebook/Chatuchaksingapore)

சிங்கப்பூரில் வாழ்வதற்கான செலவுகள் மேலும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் கண்ட விலைவாசி, தற்போது உணவின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை காண முடிகிறது.

முன்னர் S$3.00 க்கு விற்கப்பட்ட ப்ளேட் சிக்கன் ரைஸ் சாதம் தற்போது S$3.50 என விற்பனை செய்யப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர் அழுது புலம்பும் காட்சி – “சிங்கப்பூரர் / PR இல்லாமல் எப்படி வேலை செய்யலாம்”.. பிடித்து மிரட்டிய ஆடவர்

அதோடு மட்டுமல்லாமல், வாடகை ஏற்றமும் தற்போது தலைதூக்கி வருகிறது.

வெளிநாட்டு ஆடவர் ஒருவர் கூறுகையில்; “நான் தங்கி இருக்கும் வீட்டின் வாடகையை 75 சதவீதம் அதிகரிக்கப் போவதாக வீட்டு உரிமையாளர் கூறுகிறார்” என்று கூறினார்.

மேலும், 24 வயதான தென் கொரியர் ஒருவர் தற்போது பூன் கெங்கிற்கு அருகிலுள்ள கூட்டுரிமை வீட்டின் படுக்கையறைக்கு மாதத்திற்கு S$2,000 செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

4 வருட குத்தகைக்கு இருப்போரிடம் 75% வாடகை உயர்வு ஏற்பட்டு இருப்பதாகவும், புதிய வாடகைதாரர்களுக்கு 100% வாடகை உயர்வு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.