கிடுகிடுவென உயரும் சில்லறை வர்த்தகம் – சிங்கப்பூரின் பொருளியல் நிபுணர்கள் ஆய்வு

foreign worker-benefactor
Photo: Bloomberg

சிங்கப்பூரில் கடந்த மே மாதம் சில்லறை வர்த்தக விற்பனை வழக்கத்தை விட வேகமாக அதிகரித்தது.பெருந்தொற்றின் போது சில்லறை வர்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு விற்பனைகள் மிகக் குறைவானதும் இதற்கு முக்கிய காரணமாகும்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது,கோவிட்-19 தொடர்பான சுகாதாரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து,சிங்கப்பூருக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளால் உள்ளூர் சில்லறை வியாபாரம் பலனடைந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் சில்லறை வர்த்தகம் 17.8 விழுக்காடு அதிகரித்தது.இது கடந்த ஏப்ரல் மாதம் பதிவான 12.1 விழுக்காடு வளர்ச்சியைவிட அதிகமாகும்.நேற்று இந்தத் தகவல்களை புள்ளிவிவர அமைப்பு வெளியிட்டது.

Bloomberg நிறுவனம் சில்லறை வர்த்தகம் தொடர்பான ஆய்வினை நடத்தியது.இந்த ஆய்வில் பங்கெடுத்த பொருளாதார வல்லுனர்கள் ,சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகம் 13.4 விழுக்காடு ஏற்றம் காணும் என்று முன்னறிவித்தனர்.ஆனால் அவர்கள் முன்னறிவித்ததை விட கூடுதல் விற்பனை பதிவாகியுள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் வாகனங்களின் விற்பனையைச் சேர்த்துக்கொள்ளாவிடில் விற்பனை விகிதம் அதிகமாகப் பதிவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வளர்ச்சி தொடரும் என்று வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால் சிங்கப்பூரில் உயர்ந்து வரும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தால் சில்லறை விற்பனை மிதமடைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.கோவிட் பெருந்தொற்றின் அச்சத்திலிருந்து ஆசிய நாடுகள் மீண்டு வருவது சில்லறை வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய காரனமாகும்.

சிங்கப்பூர் உட்பட ஆசிய நாடுகள் பலவற்றிலும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கைக்கடிகாரம்,நகைகள்,பொழுதுபோக்கு தொடர்பான பொருள்கள் போன்ற அத்தியாவசியமற்ற பொருள்களின் விற்பனை பெருமளவில் பாதிப்படையக்கூடும் என்று பிரதமர் லீ கூறினார்.குறைந்த விலைக்கு விற்கப்படும் பொருள்களே வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கும் என்று NUS வர்த்தகத்துறை பேராசிரியர் லாரன்ஸ் கூறினார்.