இவ்வளோ நேர்த்தியா ஒரு நாட்டை கட்டமைக்க முடியுமா? சிங்கப்பூர் இப்படியொரு திட்டம் இருப்பதே பலருக்கும் தெரியாது!

indian worker jailed stalking woman work
Singapore

கடந்த 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூர் குடிநீர் விலையை 30 சதவீதம் உயர்த்தியது. இதற்கு அரசாங்கம் சொன்ன காரணம் தான் வியப்புக்குரியது. விலை உயர்த்தப்பட்டதன் காரணம் நீர் பற்றாக்குறையை காரணம் காட்டி இல்லை.

மக்கள் நீரின் சிக்கனத்தை கடைபடிக்க வேண்டும் என்று கூறி இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் அனைத்தும் 100% சுத்திகரிக்கப்பட்டு அருந்தும் தகுதி உடைய நீராகும்.

கிச்சன் சிங்க் முதல் டாய்லெட் ப்ளஷ் செய்ய பயன்படும் நீர் வரை எல்லாமே சுத்திகரிக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான சிங்கப்பூர் வாசிகள் நீரை கொதிக்க வைத்தோ அல்லது வாட்டர் பியூரி ஃபையர் பயன்படுத்துகின்றனர்.

தொழிற்சாலை உபயோகத்திற்காக அனுப்பப்படும் நீர் மட்டுமே குடிப்பதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. இருப்பினும் அந்த நீரை குடிநீர் பாட்டில்களில் பிடித்து பார்த்தால் மிகவும் சுத்தமாக தான் இருக்கும். நீரின் சுவை மட்டும் சற்று மாறுபடும்.

கடல் நீரிலிருந்து ஆர்,ஓ மற்றும் சாலினேசன் முறையின் மூலம் அதிகளவு நீர் குடிநீராக சுத்திகரிக்கப்பட்டு அன்றாடம் மக்கள் தேவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது