இந்தியாவை விட்டு வெளியேறிய சிங்கப்பூரின் Shopee நிறுவனம் – Amazon, Meesho போன்ற நிறுவனங்களிடையே கடும் பந்தயம்

singapore's ecommerce shopee out from india due to competitors like amazon meesho

சிங்கப்பூரின் முக்கிய இணைய வழி நிறுவனமான Shopee கடந்த ஆண்டு amazon,meesho,Flipkart,Snapdeal மற்றும் Udaan போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் நுழைந்தது.2021 அக்டோபர் மாதம் இந்தியாவிற்குள் நுழைந்த Shopee உலகளாவிய விரிவாக்கத் திட்டங்களுக்கு ஏற்ப இருந்தது.

இந்தியச் சந்தையில் ஏற்கனவே Amazon,Flipkart மற்றும் Meesho ஆகிய ஆன்லைன் சந்தை நிறுவனங்கள் கடும் போட்டியாளர்களாக அமைந்துள்ளன. இந்தியச் சந்தையில் Shopee நிறுவனத்தின் நிச்சயமற்ற தன்மை காரணமாக அதன் இந்திய செயல்பாடுகளை மூடுவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. திடீர் நடவடிக்கையாக சிங்கப்பூரின் Shopee நிறுவனம் அதன் இந்திய செயல்பாடுகளை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் கடந்த ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்தது. இந்தியாவில் Shopee நிறுவனம் அதன் வணிக நடவடிக்கைகளை ஏற்படுத்தி ஏறக்குறைய ஐந்து மாதங்கள் கழித்து அதன் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது.

Shopee நிறுவனத்தின் தாய் நிறுவனமான Sea Ltd மூலம் இயக்கப்படும் FreeFire என்ற விளையாட்டு செயலியை இந்தியாவில் தடை செய்த ஒரு மாதத்திற்கு பிறகு புதிய நடவடிக்கை வந்துள்ளது. மேற்கத்திய நிறுவனங்கள் இந்திய சந்தையில் போட்டியிடும் வேளையில் இது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் முக்கிய வெளியேற்றங்களில் ஒன்றாகும்.Shopee நிறுவனத்தின் வெளியேற்ற திட்டத்தை வர்த்தக அமைப்பான CAIT வரவேற்றுள்ளது.