உஷாரா இருந்தா பொழைச்சுக்கலாம்.. சிங்கப்பூர் வாடகை வீடுகளில் செலவை மிச்சப்படுத்த கையாளப்படும் தந்திரம்!

NTUC launches engagement exercise to workers
Photo: Today

வீட்டுக்கு பயனுள்ள சாதனம் என்பது. வீட்டுக்கு வீடு அவரவர்களின் தேவையைப் பொறுத்து வேறுபடும்.

இரவில் வீட்டிற்குள் பூரான், குட்டிப் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள், கதவுக்கும் தரைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி வழியாக வீட்டிற்குள் வந்து நம்மை கடித்து விடக்கூடும். அதை தடுக்க இந்த எளிய சாதனம் உதவுகிறது.

இதை கதவின் அடிப்பகுதியில் சொருகி விட்டால் போதும். ஒரு இடைவெளியும் இருக்காது. காற்றுகூட புக முடியாது. மிகவும் நன்றாக வேலை செய்கிறது. இணையதள விற்பனை வழியாக எளிதில் கிடைக்கிறது. வாங்கி பயன் அடையுங்கள். பூச்சிகளுக்கு பயமில்லாமல் தூங்குங்கள். அந்த காலத்தில் பாரை என்ற இரும்பு கம்பியை கதவுக்கு அடியில் போட்டு வைத்திருப்பார்கள்.

சிங்கப்பூரில், அடுக்குமாடி வாடகை வீடுகளில் இதை அதிகமாக பார்த்துள்ளேன். முக்கியமாக அறைகளில் ஏ சி யின் குளிரை தக்க வைத்து, மின்சாரத்தின் கட்டணத்தை குறைப்பதற்காக பயன்படுத்துகின்றனர்.

சிங்கையில் Condo என்ற தனியார் குடியிருப்புகள் மற்றும் HDB (Housing Development Board) என்ற அரசால் கட்டி கொடுக்கப்படும் குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்புகள் எந்த விதத்திலும் தனியார் குடியிருப்புகளுக்கு குறைந்தவை அல்ல. அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

பெரும்பான்மையான வீடுகளில் ஏற்கனவே குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், ஷோபா, தொலைக்காட்சி பெட்டி, பிரிட்ஜ் என்று சகலமும் இருக்கும், நாம் வாடகைக்கு போகும் முன்பு.

சிங்கையில் அரசு மேற்பார்வையில் பெரும்பாலான பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும்.