இலங்கைக்கு கைகொடுக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் – பணவீக்கத்தால் திணறும் இலங்கையர்களுக்கு நிதி உதவி வழங்கும் SRC

singapore helps to srilanka

இலங்கையில் ஊழல் காரணமாக பணவீக்கம் அதிகரித்ததன் விளைவாக பொது மக்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. எரிபொருட்களின் விலை உட்பட உணவுப் பொருட்கள் போன்ற அனைத்தின் விலைவாசியும் விரைவாக உயர்ந்ததால் இலங்கை மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதிகரித்துள்ள கண்டித்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் நலிவடைந்த சமூக மக்களுக்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் (SRC) நிதி திரட்டும் முயற்சிகளை ஆதரிப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் $1,00,000 அமெரிக்க டாலர்களை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை SRC -ன் முந்தைய உறுதிமொழிக்கு ஆதரவளிக்கும் என்று (April 15) வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மோசமான மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய இலங்கை மக்களின் அடிப்படை மற்றும் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த புதன்கிழமை (April 13) SRC அமைப்பு $1,00,000 டாலர்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த தவறிய இலங்கையில் நீண்டகால மின்வெட்டு, அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ,மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை போன்றவற்றால் நடுத்தர வர்க்கக் குடும்பம் ராக்கெட் பணவீக்கத்தால் பாதிப்படைந்துள்ளனர்.

SRC -ன் பொது நிதி திரட்டும் சேவைக்கு Giving.sg இணையதளம் வழியாகவும் ,PayNow மற்றும் காசோலைகள் மூலமாகவும் நன்கொடைகளை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.